சிக்கன் ரைஸா.. எக் ரைஸா.. மீம் போட்டு கலாய்த்த ரசிகர்.. கூலாக பதில் சொன்ன பிக்பாஸ் பிரபலம்!

சென்னை: நடிகை ரைசாவின் பெயரை வைத்து கிண்டல் செய்து மீம் போட்ட ரசிகருக்கு கூலாக பதில் சொல்லி ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளார் ரைசா வில்சன்.

Recommended Video

சகுனி நடிகை Pranitha செய்யும் சேவை | Pranitha Foundation

மாடலிங் துறை, விளம்பர படங்கள் என கலக்கி வந்த ரைசா வில்சன், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் நெருங்கி பழகி வந்ததால், காதல் கிசுகிசுக்கள் வெளியாகின.

சினிமாவில் வாய்ப்பு

சினிமாவில் வாய்ப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பாப்புலாரிட்டி மூலம், யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு ரைசாவுக்கு கிடைத்தது. ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தொடர்ந்து, தனுசு ராசி நேயர்களே, விஐபி 2, ஆலிஸ், எஃப்.ஐ.ஆர் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

சிக்கன் ரைஸா.. எக் ரைஸா

சிக்கன் ரைஸா.. எக் ரைஸா

இந்த லாக்டவுனில் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார் நடிகை ரைசா வில்சன். இந்நிலையில், ரசிகர் ஒருவர், ரைசாவின் பெயரை கிண்டல் செய்யும் விதமாக சிக்கன் ரைஸா.. எக் ரைஸா.. என கலாய்த்து மீம் போட்டுள்ளார். அந்த மீம் பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கூல் ரிப்ளை

கூல் ரிப்ளை

அந்த மீமை பார்த்து டென்ஷன் ஆகாத நடிகை ரைசா வில்சன், பிரியாணி ரைஸ் என அந்த ரசிகருக்கு பதில் போட்டுள்ளார். அந்த கூலான பதிலை பார்த்த ரைசாவின் ரசிகர்கள் சூப்பர் ரிப்ளை மேடம் என்றும், எங்களுக்கும் பிரியாணி ரொம்ப பிடிக்கும் என்றும், சிக்கன் பிரியாணியா? மட்டன் பிரியாணியா? என்ற அடுத்த விவாதத்தையும் கிளப்பும் விதமாக கமெண்ட் செய்துள்ளனர்.

பிரியாணி கிடைக்குமா

பிரியாணி கிடைக்குமா

மேலும், சில ரசிகர்கள் இரட்டை அர்த்தங்கள் கூடிய கமெண்ட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர். லெக் பீஸ் எனக்குத் தான் என்றும், பிரியாணி கிடைக்குமா? என்றும் மீம் போட்டு, ஏன் தான் வாயைக் கொடுத்தோமுன்னு ரைசா வில்சன் நினைக்கும் அளவுக்கு அவரது கமெண்ட்டுக்கு கீழே டார்ச்சர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X