twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ 2000 நிவாரண உதவி… தமிழக அரசு அறிவிப்பு !

    |

    சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ2000 நிதி உதவி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

    நாடக கலைஞர்களுக்கான நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்களுக்கு இந்த நிதி உதவி அளிக்கப்படும்.

    இதனால் நாட்டுப்புற தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னையில் 2,124 பேர் பாதிப்பு

    சென்னையில் 2,124 பேர் பாதிப்பு

    தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் 6,618 பேருக்க கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 2,124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கோவில் விழாக்களுக்கு தடை

    கோவில் விழாக்களுக்கு தடை

    கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாது அலை வீரியம் மிக்கதாக உள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால், கோவில் திருவிழாக்கள் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    அரசுக்கு கோரிக்கை

    அரசுக்கு கோரிக்கை

    இதனால், நாட்டுப்புறக்கலைஞர்கள் அந்த திருவிழாக்களில் தொடர்புடைய கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை வாழ்வாதாரமாக நம்பி இருந்த கலைஞர்கள் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுஉள்ளனர். இதனால், வாழ்வாதாரம் இழந்த கலைஞர்கள் மத்திய மாநில அரசுகள் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

    ரூ2000 நிதி உதவி

    ரூ2000 நிதி உதவி

    இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாட்டுப்புற கலைஞர்களுக்கு 2000 ரூபாய் நிதி உதவியை அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசானை தற்போது வெளியாகி உள்ளது. நாடக கலைஞர்களுக்கான நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கலைஞர்களுக்கு இந்த நிதி உதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    English summary
    Chief Minister Edappadi Palaniswami announced rs 2000 relief fund for folk artist
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X