புது மாப்பிள்ளை ‘8 தோட்டாக்கள்’ வெற்றியை வாழ்த்தி பரிசளித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. சிறப்பு!
சென்னை: சமீபத்தில் கோவையில் '8 தோட்டாக்கள்' பட ஹீரோ வெற்றிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை மணமக்கள் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர்.
மணமக்களுக்கு பரிசளித்த முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்படம் அதிவேகமாக பரவி வருகிறது.

வெற்றிக்கு திருமணம்
'8 தோட்டாக்கள்', சிவி, வனம் உள்ளிட்ட படங்களின் நாயகன் வெற்றிக்கு சில தினங்களுக்கு முன்னர் கோவையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழல் என்பதால் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை அதிகளவில் அந்த திருமணத்துக்கு அவர் அழைக்கவில்லை.

முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து
இந்நிலையில், மணமக்கள் இருவரும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து மற்றும் அவரது பரிசினை பெற்றுள்ளனர். அந்த புகைப்படம் தற்போது அதிவேகமாக ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வருகிறது. நடிகர் வெற்றி மற்றும் அவரது மனைவியை மனமார வாழ்த்தி உள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஷிவானி ஜோடியாக
8 தோட்டாக்கள் படத்தில் சூரரைப் போற்று நாயகி அபர்ணா பாலமுரளி வெற்றிக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், வெற்றி நடிப்பில் உருவாகி வரும் பம்பர் படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஷிவானி நாராயணன் வெற்றிக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏகப்பட்ட படங்கள்
புஷ்பா திரைப்படத்தில் செம்மரக் கடத்தல் கதை இடம்பெற்ற நிலையில், அதே போன்றதொரு கதையுடன் உருவாகி வரும் ரெட் சாண்டில் எனும் படத்திலும் நடிகர் வெற்றி நடித்து வருகிறார். மேலும், தீங்கிரை, கண்ணகி மற்றும் ஜோதி உள்ளிட்ட படங்களிலும் நடிகர் வெற்றி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சிறந்த கதைத்தேர்வு
கமர்ஷியல் ஹீரோவாக வலம் வர வேண்டும் என்பதை விட சிறந்த கதைகளை தேர்வு செய்து நல்ல நடிகராக வேண்டும் என்றே தொடர்ந்து உழைத்து வருகிறார் நடிகர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. அவர் நடிப்பில் வெளியான 8 தோட்டாக்கள் மற்றும் சிவி உள்ளிட்ட படங்கள் விமர்சகர்களால் வெகுவாக பாராட்டப்பட்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











