விஜய் Vs உதயநிதி.. பதவியேற்ற மறுநாளே இப்படியா? ஸ்டாலின் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
சென்னை: தமிழக முதல்மைச்சராக நேற்று விஜய் பொறுப்பேற்ற நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. இதில், தற்காலிக சபாநாயகர் கருப்பையா, முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்தார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. அக்கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவளிக்க முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றுள்ளார். நேற்று சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் பதவிப்பிரமாணம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. விஜயுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

விஜய் Vs உதயநிதி: இதைத்தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் விஜய், முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்திற்கு சென்று சந்தித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலின் வீட்டு வாசலுக்கே வந்து, விஜய்யை கட்டி அணைத்து சிரித்த முகத்துடன் வரவேற்றார். இதைத்தொடர்ந்து, ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்று இருக்கும் விஜய்க்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

ஸ்டாலின் கொடுத்த பரிசு: பின்'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - திமுக 75' புத்தகத்தை பரிசாக கொடுத்தார். இந்த சந்திப்பின் போது உதயநிதி முதல்வர் விஜயின் அருகிலேயே அமர்ந்து இருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி இருக்கும் நிலையில் பலரும் ஸ்டாலின், உதயநிதியின் பண்பை வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும் சிலர் களத்தில் எதிரியாக இருந்தாலும் நேரில் நண்பேண்டா என்று இணையவாசிகள் இதை டிரெண்டாக்கி வருகின்றனர். இதைத்தொடர்ந்து முதல்வர் விஜய் வைகோவின் இல்லத்திற்கு சென்றார். அப்போது வைகோவுக்கு முதல்வர் விஜய் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் வைகோவின் உடல்நலம் குறித்தும், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடினர். சந்திப்பு முடிந்ததும், முதல்வர் விஜய்யை வைகோ கார் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.


Click it and Unblock the Notifications