»   »  ப்ரெண்ட்ஸ் படத்தில் குட்டி விஜய்யா நடித்த பொடியனா இது?: வைரலான போட்டோ

ப்ரெண்ட்ஸ் படத்தில் குட்டி விஜய்யா நடித்த பொடியனா இது?: வைரலான போட்டோ

Posted By:
Subscribe to Oneindia Tamil
குட்டி விஜய் இப்போ எப்படி இருக்கார் தெரியுமா?

சென்னை: விஜய்யின் ப்ரெண்ட்ஸ் படத்தில் குட்டி விஜய்யாக நடித்த சிறுவன் தற்போது கேமராவுக்கு பின்னால் இருக்கிறார்.

தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர் பரத் ஜெயந்த். ஒல்லியாக, சிவப்பாக பார்க்க சாஃப்டாக இருந்த பரத் ஜெயந்த் இல்லத்தரசிகளுக்கு மிகவும் தெரிந்த முகம்.

ச்சே, இந்த பையன் என்னா அழகா நடிக்கிறான் பாரேன் என்று இல்லத்தரசிகள் நெகிழ்ந்தது உண்டு.

 சீரியல்கள்

சீரியல்கள்

தொலைக்காட்சி தொடர்கள் தவிர்த்து படங்களிலும் நடித்துள்ளார் பரத் ஜெயந்த். விஜய், சூர்யா நடித்த ப்ரெண்ட்ஸ் படத்தில் சிறுவயது விஜய்யாக நடித்தவர் பரத்.

 படிப்பு

படிப்பு

சிறு வயதிலேயே கேமராவுக்கு முன் வந்து நடிப்பில் அசத்திய பரத் விஷுவல் கம்யூனிகேஷன் படித்துவிட்டு மீண்டும் சினிமாவுக்கே வந்துவிட்டார். இம்முறை கேமராவுக்கு முன்பு அல்ல.

 உதவி இயக்குனர்

உதவி இயக்குனர்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அத்ரவா, நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார் பரத் ஜெயந்த். இயக்குனராக ஆசைப்படுகிறார்.

 ஹீரோ

ஹீரோ

சிறுவனாக இருக்கும்போது மட்டும் அல்ல தற்போது வளர்ந்த பிறகும் பரத் ஜெயந்த் க்யூட்டாக உள்ளார். அவர் ஹீரோவாக விரும்பினால் நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார்.

 மனமாற்றம்

மனமாற்றம்

கேமராவுக்கு பின்னால் தான் இருப்பேன் என்று அடம்பிடித்த அக்ஷரா ஹாஸன் நடிக்க வந்துவிட்டார். பரத் ஜெயந்தின் மனமும் மாறி அவர் நடிக்க வரலாம். யார் கண்டது?

Read more about: vijay, friends, விஜய்
English summary
Child artist Bharath Jayanth is all grown up now. Bharath is working as an assistant director after completing a degree in Visual communcations.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil