வெளியே வராதீங்க.. அப்பதான் கொரோனா வந்து ஏமாந்துட்டு திரும்பி போய்ரும்.. கொட்டாச்சி மகள் வீடியோ

சென்னை: கொரோனா பரவலைத் தடுக்க வெளியே வரும் நபர்களை பார்த்து கோபம் கொப்பளிக்க ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகர் கொட்டாச்சியின் மகளும் குழந்தை நட்சத்திரமுமான மானஸ்வி.

Recommended Video

'உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா ' | Baby Manasvi about #stayhomestayconnected

இதுகுறித்து மானஸ்வி தனது வீடியோவில் கூறுகையில், நான்தான் மானஸ்வி பேசுகிறேன். உங்களுக்கு ஒரு வாட்டி சொன்னாக் கூட புரியாதா? நியூஸ்ல, டிவி, பத்திரிகைல, எஃப்எம்ல, திரைப்பிரபலங்கள் எல்லாருமே சொல்றாங்க.

ஒரு தடவை சொன்னா நீங்கள் கேட்கவே மாட்டீங்களா? இப்ப எங்கயாவது வெளியே போவீங்க, அங்கிருந்து கொரோனா தொத்திக்குவீங்க. அப்பறம் வேற எங்காவது போவீங்க. அங்க ஒருத்தருக்கு தொத்திவிடுவீங்கள். அப்படியே மாறி மாறி பரவும். நீங்கள் வெளியே போகாமல் இருந்தால்தானே எல்லாரும் ஆபீஸுக்கு, ஸ்கூலுக்கு எல்லாம் போக முடியும்?

 வெளியே வராதீங்க

வெளியே வராதீங்க

நீங்கள் வெளியே போகாமல் இருந்தாதான் கொரோனா குறையும். உங்க மனசுக்குள்ள மட்டும் கொரோனா குறையனும் கொரோனா குறையனும்ன்னு வேண்டினா மட்டும் போதாது. வெளியே போகாமல் இருந்தால் கண்டிப்பாக கொரோனா குறையும். நான் டிவில எல்லாம் பார்க்கிறேன். எல்லாரும் பேமிலியுடன் போகிறீர்கள். போலீஸார் கையெடுத்து கும்பிட்டு கேட்கிறார்கள், வெளியே வராதீங்க, வெளியே வராதீங்கன்னு. ஏன் இப்படி பன்றீங்க.

கிருமி

கிருமி

உங்களுக்கு எல்லாம் அறிவே இல்லையா. எல்லாரும் சொல்றாங்கல்ல. நீங்கள் வெளியே போகாமல் இருந்தீங்கன்னாவே அந்த கிருமி மக்கள் எங்கே மக்கள் எங்கேன்னு தேடி தேடியே போய்டும். நீங்கள் வெளியே போனீங்கன்னா, இதோ இங்க ஒருத்தன் இருக்கான். அவன் உடம்புல போய் அப்படியே தங்கிடலாம்னு தோணும் அதுக்கு.

கோபம்

கோபம்

நீங்கள் வெளியே போகாம இருந்தால்தானே கொரோனா குறையும் , நாங்கள் ஸ்கூலுக்கு போக முடியும். நீங்கள் எல்லாம் படித்தவர்கள்தானே. ஏங்க இப்படி பன்றீங்கன்னு மிகவும் கோபத்துடன் கருத்துகளை கொப்பளிக்கிறார் மானஸ்வி. கோபம் நியாயமானதுதான் , ஆனால் வெளியே செல்பவர்கள் எல்லாம் எத்தனை பெரியவர்கள். அவர்கள் அவன் இவன் என பேசலாமா.

 பெரிய வார்த்தைகள்

பெரிய வார்த்தைகள்

ஒரு கட்டத்தில் அறிவு இருக்கிறதா, படித்தவர்கள்தானா என இந்த சிறுமி கேட்கிறார்! என்னதான் சினிமா நட்சத்திரமாக இருந்தாலும் கொஞ்சமாவது பெரியவர்களை மதிக்க வேண்டும். அவர்களிடம் போய் கேட்டால் அவர்களில் சிலர் கூறும் காரணங்கள் ஏற்கத்தக்கவைகளாகவே இருக்கும். எனவே பொத்தாம் பொதுவாக மரியாதையின்றி பேசினால் எப்படி? என்னதான் மக்களின் நல்லத்திற்கு இந்த சிறுமி பேசினாலும் பெரிய பெரிய ஸ்டார்களே வேண்டுகோள் வைக்கிறார்கள். இவர் போல் வார்த்தைகளை விடுவதில்லை. ஆனால் இவர் என்னவோ வயதிற்கு மீறியபடி பேசுகிறார்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X