அந்த விளம்பரத்தில் நடிச்ச குழந்தை இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க..!

By Vignesh Selvaraj

Recommended Video

அந்த விளம்பரத்தில் நடிச்ச குழந்தை இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க..!- வீடியோ

மும்பை : தியேட்டர்களில் எந்தப் படத்தைப் பார்க்கப் போனாலும் இவர் முகத்தைக் கட்டாயம் பார்த்திருப்பீர்கள். இந்த முகத்தை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.

எல்லாத் திரைப்படங்களுக்கும் இடையே வரும் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்தவர் சிம்ரன் நடேகர்.

வீட்டில் புகைப்பிடிக்கும் அப்பாவை ஏக்கமாகப் பார்த்து, அவர் மனதை மாற்றும் அந்தக் குழந்தையாக நடித்தவர்தான் சிம்ரன் வடேகர். பப்ளி குழந்தையாக இருந்தவர் இப்போது சீரியல்களில் நடித்து வருகிறார்.

சிம்ரன் நடேகர்

குழந்தை நட்சத்திரமாக விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்து கவனம் ஈர்த்த சிம்ரன் நடேகர் இப்போது இளம்பெண்ணாக வளர்ந்திருக்கிறார்.

16 வயது

7 வயதில் அரசின் விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்த சிம்ரனுக்கு இப்போது 16 வயதாகிறது. அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களைப் பதிவேற்றி வருகிறார் சிம்ரன்.

சிம்ரன்

சமூக வலைதளங்களில் இப்போது சிம்ரனுக்கு எக்கச்சக்க ரசிகர்கள். இன்ஸ்டாகிராமில் அவரைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 40,000.

அரசு விளம்பரம்

மத்திய சுகாரத்துறை அமைச்சகத்தின் சார்பில் 2008-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு விளம்பரத்தில் நடித்தவர் சிம்ரன் நடேகர்.

பல விளம்பரங்கள்

அந்த விளம்பரம் தவிர, கெல்லாக்ஸ், க்ளினிக் ப்ளஸ், வீடியோகான் உள்ளிட்ட நிறுவனங்களின் விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார் சிம்ரன்.

சீரியல் நடிகையாக

இப்போது சோனி டி.வி-யின் பிரபலமான சீரியல் ஒன்றில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். 2014-ம் ஆண்டு பாலிவுட் படம் ஒன்றிலும் சிறிய கேரக்டரில் நடித்திருக்கிறார் சிம்ரன்.

ஏழு வயதில்

சிம்ரன் ஏழு வயதில் இருக்கும்போது எடுக்கப்பட்ட விளம்பரம் இன்றும் கூட புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வுக்காகப் பயன்பட்டு வருகிறது. அவரை அடையாளம் கொண்டு சிலர் விசாரித்திருக்கிறார்களாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X