நடிகை வெண்பாவுக்கு இன்று பிறந்தநாள்.. ரசிகர்கள் வாழ்த்து!
சென்னை : குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகை வெண்பா இப்பொழுது கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Recommended Video
தமிழில் காதல் கசக்குதய்யா, பள்ளிப்பருவத்திலே மற்றும் சமீபத்தில் வெளியான மாயநதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் இப்பொழுது மலையாளத் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் செப்டம்பர் 4 ஆம் தேதியான இன்று வெண்பா தனது பிறந்தநாளில் குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருவதையொட்டி அவரது ரசிகர்கள் நண்பர்கள் மற்றும் பல திரைப் பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக
எதார்த்தமான சினிமாவை எடுத்து ரசிகர்களை கவர்ந்து வந்து இயக்குனர் தங்கர்பச்சான் இயக்கிய "சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி" திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை வெண்பா அதைத்தொடர்ந்து கஜினி, சிவகாசி உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்து குழந்தை நட்சத்திரமாக மிகவும் பிரபலமானார்.

கதாநாயகியாக வலம்
இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவான "கற்றது தமிழ்" திரைப்படத்தில் ஆனந்தியின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்த வெண்பா இப்பொழுது தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக வலம் வரத் தொடங்கியுள்ளார்.

காதல் கசக்குதய்யா
கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த வெண்பா 2014 ஆம் ஆண்டு வெளியான "காதல் கசக்குதய்யா" என்ற வித்தியாசமான காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டார். பள்ளி செல்லும் சிறுமி கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவருக்கு நடிகர் துருவா ஜோடியாக நடித்திருந்தார்.

சிறந்த நடிப்பை
காதல் கசக்குதய்யா திரைப்படத்தில் நடித்த வெண்பா அதைத் தொடர்ந்து பள்ளி பருவத்திலேயே திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து வந்த நிலையில் இந்த ஆண்டு வெளியான மாயநதியில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பலரையும் கவர்ந்து இழுத்தார்.

ஜிவி பிரகாஷ் நடிப்பில்
குழந்தை நட்சத்திரமாக இருந்து இப்பொழுது கதாநாயகியாக அவதாரம் எடுத்து வரும் வெண்பா பல்வேறு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் "ஆயிரம் ஜென்மங்கள்" திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார்.

பிறந்த நாள்
தனது அழகான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் வெண்பா, செப்டம்பர் 4 ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் நிலையில் இவரது ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











