தூசி தட்டப்பட்ட சிறுமி வழக்கு.. நடிகை பானுப்ரியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு.. விரைவில் கைது?

நடிகை பானுப்ரியா மீது மீண்டும் 3 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை: 14 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்திய விவகாரத்தில் நடிகை பானுப்ரியா மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தவர் பானுப்ரியா. திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டவர், சீரியல் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார்.

தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிவலிங்கா, மகளிர் மட்டும் போன்ற படங்களில் நடித்திருந்தார்.

சிறுமியின் தாய் புகார்

சிறுமியின் தாய் புகார்

கடந்த பிப்ரவரி மாதம் 14 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு வைத்து கொடுமைப் படுத்தியதாக பானுப்ரியா மீது புகார் அளிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட சிறுமியின் தாய் பிரபாவதி என்பவர், இது தொடர்பாக ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

பாலியல் ரீதியாக கொடுமை

பாலியல் ரீதியாக கொடுமை

அதில், ‘நடிகை பானுப்ரியா வீட்டில் மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து என் மகள் சந்தியாவை அவர்கள் அழைத்து சென்றனர். ஆனால், கடந்த 18 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை. சமீபத்தில் வேறு ஒருவரின் மொபைல் போன் மூலம் என்னுடன் பேசிய சந்தியா, பானுப்பிரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன் தன்னை மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார். அடித்து துன்புறுத்துகின்றனர் என்றார்.

மிரட்டினர்

மிரட்டினர்

இதுபற்றி கேட்பதற்காக 18.1.2019 அன்று பானுப்பிரியா வீட்டிற்கு சென்றேன். ஆனால் அங்கிருந்தவர்கள் உன்னால் முடிந்ததை செய்துகொள். எங்களிடம் பணம் உள்ளது. எங்களுக்கு செல்வாக்கும் உள்ளது. உன் மகள் மீது திருட்டுக் குற்றம் சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பி விடுவோம் என என்னை மிரட்டினர்' எனத் தெரிவித்திருந்தார்.

பானுப்ரியா மீது வழக்கு

பானுப்ரியா மீது வழக்கு

பிரபாவதியின் புகார் மனுவின் அடிப்படையில் அப்போதே பானுப்ரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் சிறுமியை மீட்டு குழந்தை நலக்குழும அதிகாரிகள் முன்பு ஆஜர்படுத்தினர். சிறுமியிடம் நடத்தப்பட்ட பிரபாவதி கூறியது உண்மை என்பது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் பானுப்பிரியா மீது நடவடிக்கை எடுக்க குழந்தைகள் நலக் குழுமம் பரிந்துரை செய்தது. பானுப்பிரியா மீது தொழிலாளர் நலத்துறை வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.

பதில் புகார்

பதில் புகார்

இது ஒருபுறம் இருக்க, தன் வீட்டில் திருடியதாக சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் அவரது அம்மா மீது பானுப்ரியாவும் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், சிறுமியும் அவரது தாயாரும் கைது செய்யப்பட்டு, சிறுமி கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டனர்.

மீண்டும் வழக்குப்பதிவு

மீண்டும் வழக்குப்பதிவு

இந்த சூழ்நிலையில், மீண்டும் பானுப்ரியாவை விசாரணை செய்ய பாண்டி பஜார் காவல் துறையினருக்கு குழந்தை தொழிலாளர் தடுப்பு அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. பானுப்ரியாவின் வீடு பாண்டிபஜார் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருப்பதால், தற்போது இந்த வழக்கு அங்கு தொடரப்பட்டுள்ளது.

கைதாக வாய்ப்பு

கைதாக வாய்ப்பு

அதில், சிறுமியை பணியில் அமர்த்தியது, தாக்கி காயம் ஏற்படுத்தியது, மிரட்டல் என மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் பானுப்ரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், பானுப்பிரியா எந்நேரமும் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X