விஜய் தூக்கி வைத்திருக்கும் பாப்பா யார்னு தெரியுதா?
Recommended Video

சென்னை: விக்ராந்த் ஆறு மாத குழந்தையாக இருந்தபோது அவரை அண்ணன் விஜய் தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் வைரலாகியுள்ளது.
அண்ணன் விஜய் போன்று தம்பி விக்ராந்தும் நடிகரானார். அசுர வேகம் இல்லாவிட்டாலும் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார் விக்ராந்த்.
அவருக்கு விஷால் உள்ளிட்ட நண்பர்கள் பக்கபலமாக உள்ளனர்.
விஜய்
விக்ராந்த் தான் ஆறு மாத குழந்தையாக இருந்தபோது அண்ணன்கள் விஜய் மற்றும் இயக்குனர் சஞ்சீவ் ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள்
விக்ராந்த் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து விஜய் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உங்களை கொண்டாட நாங்கள் இருக்கிறோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆதரவு
நாங்களும் இருக்கிறோம் ப்ரோ என்று தல ரசிகர்களும் விக்ராந்துக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். புகைப்படத்தில் ரொம்ப கியூட்டாக இருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
படம்
எப்பொழுது விஜய் அண்ணாவுடன் சேர்ந்து நடிப்பீர்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











