Leo: பயங்கரமான கொடூர காட்சிகள்.. சிறுவர்கள் இந்த படத்தை பார்க்க முடியாது.. லியோ முதல் விமர்சனம்!
சென்னை: லியோ திரைப்படத்தில் பயங்கரமான கொடூர காட்சிகள் இருப்பதால் இப்படத்தை சிறுவர்கள் பார்க்க முடியாது என அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முதல் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ படத்தில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.
தளபதியின் லியோ: அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் அண்மையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது. அதில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனம் மற்றும் வன்முறை காட்சிகள் இருந்ததால், விமர்சனங்கள் எழுந்தன. மேலும், லியோ படத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 19ஆம் தேதி முதல் அக்டோபர் 24ஆம் தேதி வரை தினசரி 5 காட்சிகள் திரையிடப்பட உள்ளன.
கொடூரமான காட்சிகள்: லியோ படத்தை யூகேவில் விநியோகம் செய்துள்ள, அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் படம் குறித்த முதல் விமர்சனத்தை X தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், LEO படத்தில் வன்முறை காட்சிகள், கொடூரமான காட்சிகள் அதிகம் உள்ளது. மேலும் படத்தில் பல கிராஃபிக் காட்சிகள் உள்ளன. லியோ படத்தை 15க்கும் மேற்பட்டோர் பார்க்கலாம் என இலக்கு இருந்தாலும், 18 வயது மேற்பட்டவர்கள் மட்டுமே திரையரங்கில் படத்தை பார்க்க முடியும்.

குழந்தைகள் பார்க்க முடியாது: லியோ படத்தில் பல இடங்களில் கொடூர காட்சிகள் உள்ளன. அவற்றை அகற்றினால், அது படத்தை பாதித்துவிடும் என்பதால், அந்த காட்சி அப்படியே படத்தில் உள்ளது. இதனால், 4 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் பலர் தளபதி விஜயின் தீவிர ரசிகர்களாக இருந்தாலும், சில கொடூரமான காட்சிகள் படத்தில் உள்ளதால், இப்படத்தை அவர்களால் பார்க்க முடியாது, குழந்தைகளோடு லியோ படத்தை தியேட்டரில் பார்க்க நினைத்த பெற்றோர்களிடம், நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம்.
100% லோகேஷ் படம்: மேலும், LEO திரைப்படம் 100 சதவீதம் லோகேஷ் கனகராஜ் திரைப்படம் இதில், தீவிரமான மற்றும் வன்முறை நிறைந்த படமாக உள்ளது. எனவே 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே படத்தை பார்க்க முடியும் என என அஹிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











