twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் படத்திற்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் வரவேண்டாம் - மிஷ்கின் அதிரடி

    By Manjula
    |

    சென்னை: என் படத்திற்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் வரவேண்டாம் என்று கூறி அதிரடித்திருக்கிறார் இயக்குநர் மிஷ்கின்.

    ஆர்.பி.ரவி இயக்கத்தில் இயக்குநர் பி.வாசு மகன் சக்தி மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் தற்காப்பு படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று நடைபெற்றது.

    Children & Women Don't Come My Movie - Says Mysskin

    விழாவில் சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் மிஷ்கின், படத்தையும் படக்குழுவினரையும் வாழ்த்திப் பேசினார். மேலும் இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் படைப்பாளிகளின் சுதந்திரம் எப்படி இருக்கிறது என்றும் விரிவாகப் பேசினார்.

    விழாவில் மிஷ்கின் பேசியவற்றை இங்கே பார்க்கலாம்.

    தணிக்கைத் துறையால் பறிபோகும் சுதந்திரம்

    தணிக்கைத்துறையால் கலைஞர்கள் பலரும் சுதந்திரத்தை இழக்கிறார்கள், இந்தப்படத்துக்கு (தற்காப்பு) யுஏ சான்றிதழ் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். "யுஏ" மற்றும் "ஏ" சான்றிதழ் பெற்ற படங்கள் முப்பது சதவீத வரி கட்டவேண்டியிருக்கிறது. இன்றைய திரைப்படத்துறை இருக்கும் நிலையில் தயாரிப்பாளர்களுக்கு அது பெரியஅடி. தணிக்கைத்துறையின் செயல்பாடுகளால் நாங்கள் சுதந்திரம் இழந்திருக்கிறோம்.

    ஈசியாக கிடைக்கும் "ஏ" சான்றிதழ்

    கெட்டவார்த்தைகள், வன்முறைகள் படத்தில் இருந்தால் அதற்கு "ஏ" சான்றிதழ் என்று சுலபமாக சொல்லிவிடுகிறார்கள். கெட்டவார்த்தை, வன்முறை இல்லாமல் வாழ்க்கையே இல்லை. நான் ஒருவரைக் கோபம்கொண்டு பேசும் போது போடாசெல்லமே என்றா திட்டமுடியும்?

    பிசாசால் கிடைத்த "ஏ"

    நான் பிசாசு என்றொரு படமெடுத்தேன்.எங்கம்மா, பிசாசு என்றால் பயங்கரமானது என்று பொய்க்கதைகளைச் சொல்லிவிட்டார். ஆனால் திரைப்படத்துறையில்தான் நிறைய பிசாசுகளை நான் பார்த்தேன். பிசாசு மிகவும் மென்மையானது அன்பானது அதைப்பார்த்து நீங்கள் பயப்படத்தேவையில்லை என்று படமெடுத்தேன். படத்தைப் பார்த்த தணிக்கைத்துறையினர், படம் நன்றாக இருக்கிறது ஆனால் படத்தில் பிசாசு இருப்பதால் படத்துக்கு "ஏ" என்று சொல்லிவிட்டார்கள்.

    பாலாவிடம் திட்டு வாங்கினேன்

    பிசாசு படத்திற்கு "ஏ" சான்றிதழ் கிடைத்ததால் ஏண்டா இப்படி எடுத்தே என்று பாலா என்னைத் திட்டினார். நாங்கள் படப்பிடிப்பு நடத்தும்போதே ஒரு காட்சி வைத்தால், இதை வெட்டிவிடுவார்கள் என்று கேமிராமேன் சொல்லுகிறார், அந்தஇடத்திலேயே எங்களுக்குச் சுதந்திரம் இல்லாமல் இருக்கிறது.

    படைப்பாளிகளுக்கு சுதந்திரம் வேண்டும்

    ஒரு காட்சி (அல்லது) விசயத்தை எழுதும்போதே இப்படி வைத்தால் திட்டுவார்களே என்று அடித்துவிட்டு எழுதவேண்டியிருக்கிறது. எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும். அதற்கு, தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் ஆவணசெய்யவேண்டும்.

    சினிமா குழந்தைகளுக்கானது அல்ல

    இன்றைக்கு எல்லோரும் குழந்தைகளோடு படத்தைப் பார்க்கமுடியவில்லை என்று சொல்கிறார்கள். இந்த சினிமாமீடியம் என்பது குழந்தைகளுக்கானது அல்ல. எனவே திரையரங்குக்குக் குழந்தைகளோடு வராதீர்கள். இது வயதுவந்தவர்களுக்கான மீடியம். குழந்தைகளோடு கார்ட்டூன் படங்கள் பாருங்கள், அல்லது மைடியர்குட்டிச்சாத்தான் மாதிரியான படங்களுக்குப் போங்கள்.

    பெண்கள் வரவேண்டாம்

    நான் அடுத்து திகில் கலந்த ஏ படம்தான் எடுக்கப்போகிறேன், என் படத்துக்குப் பொம்ளைங்க வரவேண்டாம். தயவுசெய்து வரவேண்டாம். எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி எல்லாம் இல்லாமல் போயிருந்தால் நம் வாழ்க்கை என்னவாகியிருக்கும் என்று யோசித்துப்பாருங்கள், அப்படிப்பட்டவர்கள் இருக்கும் இந்தத்துறையைப் பாதுகாக்கவேண்டியது அனைவருடைய கடமை" என்று உணர்ச்சி பொங்க மிஷ்கின் பேசினார்.

    ஏற்கனவே நாட்டில பல படங்கள் பெண்கள் பார்க்க முடியாத படங்களாத் தான் வந்திட்டிருக்கு சார்.

    English summary
    Tharkaappu Movie Audio Launch: Director Mysskin Says Children & Women Don't Come My Movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X