என்னது இந்த பாடல் காப்பியா? சில்லா சில்லா பாடல் குறித்து பரவும் ட்ரோல்கள்!

சென்னை: துணிவு படத்திலிருந்து சில்லா சில்லா பாடல் இணையத்தில் 10 செகண்ட் லீக்கான நிலையில் அந்த பாடல் காப்பி என நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அஜித் நடித்துள்ள துணிவுத் திரைப்படம் பொங்கலுக்கு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து தயாரிப்பாளர் படத்தை பிரமாண்டமான முறையில் விளம்பரப்படுத்தி வருகிறார்.

கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகு அஜித், விஜய் இருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அஜித்

அஜித்

அஜித் நடிப்பில் நீண்ட எதிர்ப்புக்கு இடையே வெளியான வலிமை திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் எழுந்தன. அஜித்தின் பைக் ரேஸ் காட்சிகளை ரசித்த ரசிகர்கள், வலிமை படத்தில் செண்டிமென்ட் காட்சியை ரசிக்கவில்லை என்பதால், இணையத்தில் விமர்சனங்கள் தாறுமாறாக பரவியது.

கதை அஜித்துக்கு பிடித்துவிட்டது

கதை அஜித்துக்கு பிடித்துவிட்டது

இதையடுத்து, அஜித், எச் வினோத் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். 1987ல் நடந்த பஞ்சாப் வங்கிக் கொள்ளையை மையக்கருவாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் கதையை அஜித்திடம் ஒன் லைனில் கூறியதுமே நடிக்க சம்மதித்து விட்டதாக எச் வினோத் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

சில்லா சில்லா பாடல்

சில்லா சில்லா பாடல்

துணிவு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், துணிவு படத்தின் முதல் பாடலான சில்லா சில்லா பாடல் டிசம்பர் 9ந் தேதி வெளியாகும் என போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வாக அறிவித்து இருந்தார். அப்பாடலை அனிருத் பாட, வைஷாக் பாடல் வரிகளை எழுதி உள்ளார்.

பாடல் 10 செகண்ட் லீக்

பாடல் 10 செகண்ட் லீக்

அஜித்தின் சில்லா சில்லா பாடலுக்காக ரசிகர்கள் அனைவரும் காத்திருந்த நிலையில்,நேற்று சோஷியல் மீடியாவில் சில்லா சில்லா பாடலின் 10 செகண்ட் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இணையத்தில் திருட்டு தனமாக சில நொடிகள் வெளியாகி இருக்கும் இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் புறக்கணிக்க வேண்டும் என கூறி வருகிறார்கள்.

இந்த பாடல் காப்பியா?

இந்த பாடல் காப்பியா?

இந்நிலையில், இணையத்தில் வெளியாகி உள்ள 10 செகண்ட் வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இந்த பாடல் காப்பி என்ற புது சர்ச்சையை கிளப்பி உள்ளனர். அதாவது சில்லா சில்லா பாடல், சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தில் வரும் ஜலபுல ஜங் பாடல் போல இருப்பதாக ட்ரோல் செய்து வருகின்றனர். 10 செகண்ட் வீடியோவைப் பார்த்து அதுக்குள்ள காப்பி என்று சொல்வதா என கேட்டு இணையத்தில் ஒரு போரை நடத்தி வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.

தீ தளபதி பாடல்

தீ தளபதி பாடல்

விஜய்யின் வாரிசு படத்திற்காக சிம்பு பாடிய தீ தளபதி பாடலைர நானும் ரவுடிதான் படத்தில் வரும் வரவா வரவா எவிஜய்யின் வாரிசு படத்திற்காக சிம்பு பாடிய தீ தளபதி பாடலை நானும் ரவுடிதான் படத்தில் வரும் வரவா வரவா என்ற பாடல் போல இருப்பதாக கூறி நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாக்கினர். எந்த பாடல் வந்தாலும் அதனை இணையத்தில் காப்பி என ட்ரோல் செய்வது வாடிக்கையாகி விட்டது.ன்ற பாடல் போல இருப்பதாக கூறி நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டாக்கினர். எந்த பாடல் வந்தாலும் அதனை இணையத்தில் காப்பி என ட்ரோல் செய்வது வாடிக்கையாகி விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X