இம்சை அரசன் புகழ் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கும் விஜய்
சென்னை: இளையதளபதி விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் அடுத்ததாக நடிக்கவிருக்கிறார்.
வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படம் எடுத்து அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்தவர் இயக்குனர் சிம்புதேவன். அவரின் அறை எண் 305ல் கடவுள் படமும் வித்தியாசமாக இருந்தது.
இப்படி வித்தியாசமாக படம் எடுக்கும் சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கிறார் இளையதளபதி விஜய்.

சிம்பு
சிம்புதேவன் விஜய்யை சந்தித்து ஒருவரியில் கதை சொல்லியுள்ளார். அதை கேட்ட விஜய்க்கு கதை மிகவும் பிடித்துவிட்டது. இந்த கதை ஆக்ஷன் மற்றும் பேன்டசி கலந்ததாம்.

நான் ரெடி
கதை ரொம்ப நல்லா இருக்கு. நான் நிச்சியம் உங்கள் படத்தில் நடிக்கிறேன் என்று விஜய் கூற சிம்புதேவன் மகிழ்ச்சி அடைந்துள்ளார். மாத்தி யோசிக்கும் சிம்புவின் படத்தில் வித்தியாசமான விஜய்யை எதிர்பார்க்கலாம்.

தயாரிப்பு
சிம்புதேவன் இயக்கும் படத்தை விஜய்யின் பிஆர்ஓ பி.டி. செல்வகுமார் மற்றும் தமீன்ஸ் பிலிம்ஸின் ஷிபு ஆகியோர் தயாரிக்கிறார்கள். தமீன்ஸ் பிலிம்ஸ் விஜய்யின் ஜில்லா படத்தை சென்னையில் வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு
சிம்புதேவன்-விஜய் கூட்டணி சேரும் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் துவங்குகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக எந்த நடிகை நடிக்கிறார் என்று இதுவரை தெரியவில்லை.

வாள்
விஜய் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் வாள் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்குகிறது. படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











