கோச்சடையான் இசை வெளியீட்டு விழா.. சீனாவில் தயாராகும் 3 டி அழைப்பிதழ்கள்!

By Shankar

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக சீனாவில் 3 டி அழைப்பிதழ்களை அச்சடித்துள்ளனர்.

கோச்சடையான் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 9-ம் தேதி சென்னை சத்யம் திரையரங்கில் நடக்கிறது. காலை 10.30 மணிக்கு நடக்கும் இந்த விழாவில் பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பங்கேற்கிறார்.

பலத்த பாதுகாப்பு

பலத்த பாதுகாப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன், படத்தில் நடித்த தீபிகா படுகோன் உள்பட அனைவரும் கலந்து கொள்கின்றனர். இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ரசிகர்களுக்கு அனுமதியில்லை

ரசிகர்களுக்கு அனுமதியில்லை

சத்யம் அரங்கத்தில் அதிகபட்சம் 800 பேர் மட்டுமே அமர முடியும். ஆனால் ரஜினியின் ரசிகர் கூட்டத்தை அனுமதித்தால், திரையுலகினர் மற்றும் செய்தியாளர்கள் நிற்கக் கூட இடமிருக்காது என்பதால், ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் அனைவருமே இந்த விழாவில் பங்கேற்கவிருக்கின்றனர்.

3 டி அழைப்பிதழ்கள்

3 டி அழைப்பிதழ்கள்

இந்த விழாவுக்காக 3 டி அழைப்பிதழ்களைத் தயாரித்துள்ளது கோச்சடையான் குழு. அழைப்பிதழில் 3 டியில் ரஜினியின் உருவம் தெரிவது போல வடிவமைத்துள்ளனர். சீனாவில் வைத்து இந்த அழைப்பிதழ்களை உருவாக்கியுள்ளனர்.

கவிஞர் வைரமுத்து

கவிஞர் வைரமுத்து

கோச்சடையான் பாடல்கள் குறித்து கவிஞர் வைரமுத்து கூறும்போது, "கோச்சடையான்' உலக படம். புதிய தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. இதில் கிளைமாக்ஸ் பாடலை எழுதியது தனி அனுபவமாக இருந்தது. இந்த பாடலை ஏ.ஆர்.ரஹ்மானே பாடியுள்ளார்.

ரஜினி பாராட்டு

ரஜினி பாராட்டு

ஒவ்வொரு பாடலையும் கேட்டுப் பாராட்டினார் சூப்பர் ஸ்டார். தொழில்நுட்ப அளவில் இது புது மாதிரி படமே தவிர, மற்ற வகையில் எல்லா படங்களையும் போலவே அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் ரசித்து பார்க்கக் கூடிய படமாகவே இது இருக்கும்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X