மக்கள் முன் நான் காணாமல் போக மாட்டேன்… கமல் முன் கதறி அழுத சின்னப்பொண்ணு!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரங்களில் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர் மற்றும் கூட்டத்தில் காணாமல் போன இரண்டு போட்டியாளர்கள் பற்றி கருத்துக்கணிப்பு செய்து முடிவு அறிவிக்கப்பட்டது.

இதில் நாடியா மற்றும் சின்னப்பொண்ணு சிறப்பாக செயல்படாதவர்களாக தேர்வுக்குழுவால் அறிவிக்கப்பட்டது.

அபிஷேக், அக்ஷரா மற்றும் பாவனி ஆகிய 3 பேர் இந்த தேர்வுக்குழுவில் இடம் பெற்று இருந்தனர்.

காணாமல் போனவர்கள்

காணாமல் போனவர்கள்

இன்றைய நிகழ்ச்சியில் இதுகுறித்து கமல் கேட்டறிந்தார். குழுவின் சார்பாக அபிஷேக் காணாமல் போனவர்கள், ஜொலித்தவர்கள் குறித்த விவரத்தை கமலிடம் கூறினார். இதில், கூட்டத்தில் காணாமல் போன இருவர் நாடியா மற்றும் சின்ன பொண்ணு என்றார். சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர் இமான் அண்ணாச்சி என்று கூறினார்.

யாரும் பேசுவது இல்லை

யாரும் பேசுவது இல்லை

காணாமல் போனதாக உங்களை கூறுகிறார்கள் இதுகுறித்து உங்களின் கருத்தை சொல்லுங்க என்கிறார் கமல், இதுகுறித்து பேசிய சின்னப்பொண்ணு, என் கிட்ட யாரும் சரியாக பேசுவது இல்லை, நான் போனாலே பேச்சை நிறுத்திவிடுகிறார்கள் அது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது. இதனால் அவங்க கூட போய் பேச எனக்கு பிடிக்கல, இதனால் நான் தனியாகவே அமைதியாக உங்காந்துக்கிறேன் என்றார்.

எதிர்பார்த்தது தான்

எதிர்பார்த்தது தான்

இதுகுறித்து, பேசிய நாடியா, இதுபற்றி பெருசா கருத்து எதுவும் இல்லை. நான் எதிர்பார்த்தது தான். நான் காணாமால் போயிட்டேனு சொல்றாங்கா... கரைக்டா நான் தான் காண போயிருக்கேனு நோட்டீஸ் பண்ணி இருக்காங்க, ஆனால், எனக்கு நான் காணாமல் போகவில்லை என்று தோன்றுகிறது என்று கூறினார்.

கதறி அழுதார்

கதறி அழுதார்

இதையடுத்து, பேசிய கமல்ஹாசன், சின்னப்பொண்ணு, நீங்க காணாமல் போய்டீங்கனு வீட்டில் இருப்பவர்கள் தான் சொல்கிறார்கள் மக்கள் அப்படி சொல்லவில்லை நீங்கள் 'ஷேஃப்' என்கிறார். இதை கேட்ட சின்னபொண்ணு கதறி அழத் தொடங்கிவிட்டார். நான் எப்போதும் மக்கள் முன் மற்றும் இந்த வீட்டில் காணாமல் போக மாட்டேன் என அவர் கூறுகிறார்.

 உள்வேலை பார்த்தேன்

உள்வேலை பார்த்தேன்

இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில் சிறப்பாக செயல்பட்ட போட்டியாளரான இமான் அண்ணாச்சி அபிஷேக்கிடம் நன்றி கூறுகிறார். அதற்கு அபிஷேக், நாங்க எல்லாரும் சேர்ந்து எடுத்த முடிவுதான் இது, இருந்தாலும் ஜொலித்தவராக உங்களின் பெயர் வர, நான் சில பல உள்வேலை செய்தேன் என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X