twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாமல்லபுரத்தில் மோடி - ஜின்பிங் சந்திப்பு - 2000 ஆண்டுக்கு முன்னால் போன ஓவியர் ஸ்ரீதர்

    |

    Recommended Video

    CHINA PRESIDENT VISIT INDIA | MODI | MAMALLAPURAM |AP SREETHAR ARTIST |V-CONNECT |FILMIBEAT TAMIL

    சென்னை: சீன அதிபர் ஷி ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்/ மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்களின் அந்த சந்திப்பை கற்பனையில் ஒவியமாக வரைந்துள்ளார் ஓவியர் ஸ்ரீதர். அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதங்கள், கடற்கரைக் கோவில் ஆகிய வரலாற்றுச் சின்னங்களின் பின்னணியில் சீன அதிபரும் இந்திய பிரதமரும் சந்தித்து பேசுவதைப் போல தத்ரூபமாக வரைந்துள்ளார். இது குறித்தும் தனது ஓவியங்கள், கலைத்திறமை பற்றியும் பிலிமி பீட் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் சுவாரஸ்யமான பல தகவல்களை கூறியுள்ளார்.

    சீன அதிபர் ஷி ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார், மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்பு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஏற்கனவே பிரெஞ்ச் அதிபர் இந்தியா வந்தபோது சண்டிகரில் உள்ள ராக் கார்டனில்தான் அந்த சந்திப்பு நடந்தது அதை ஓவியமாக வரைந்தேன், பிரெஞ்ச் அதிபர் பாராட்டினார். நான் நம்முடைய பிரதமரை பலமுறை வரைந்திருக்கிறேன்.

    China president visits India Artist Sreethar painting Modi

    பிரதமர் எந்த இடத்தில் யாரை சந்தித்து பேசுகிறார் என்பதுதான் முக்கியம். ஐந்து ரதங்களின் முன்பாக சந்தித்து பேசினால் எப்படியிருக்கும் என்பதை கற்பனையாக வரைந்திருக்கிறேன். அதே போல 2000 ஆண்டுகளுக்கு முன்பாக பல்லவ மன்னரும் சீன மன்னரும் சந்தித்து பேசினால் எப்படியிருக்கும் என்பதை கற்பனையாக வரைந்திருக்கிறேன் என்றும் கூறியுள்ளார் ஸ்ரீதர்.

    "ஐ லவ் யூ".. அன்பையும் தந்துவிட்டு முதல் பதிவிலேயே மன்னிப்பும் கேட்ட லாஸ்லியா.. யார்கிட்ட தெரியுமா?

    கமலுக்கும் எனக்குமான தொடர்பு நீண்டகாலமானது. என்னுடைய முதல் ஷோவிலேயே அவரை அழைக்க முயற்சி செய்தேன். 54வது ஷோவில்தான் கமல் வந்தார். எத்தனையோ பேரை கமல் உற்சாகப்படுத்தியிருக்கிறார். புதிது புதிதாக என்ன செய்தாலும் கமல் சாரிடம் கொண்டு போட்டு காட்டுவேன் அவர் உற்சாகப்படுத்துவார்.

    China president visits India Artist Sreethar painting Modi

    ஒத்த செருப்பு படத்திற்கு ஓவியம் வரைந்தது நெகிழ்வான விசயம். மகாத்மா காந்தி முதல் பிரதமர் மோடி வரை அனைவரையும் இணைத்து ஒரு ஓவியம் வரைந்திருக்கிறேன். 100 லெஜன்ட்ஸ் சேர்ந்து இருந்தா எப்படி இருக்கும் என்பதன் கற்பனைதான். நாம் கொடுக்கும் பரிசு தனித்துவமானதாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன் என்று கூறியுள்ளார்.

    அவரது ஓவியக்கூடத்தில் எத்தனையோ அற்புதங்கள் நிறைந்துள்ளன. மகாத்மா காந்தி உயிரோடு இருப்பது போல சிலை வடிக்கப்பட்டுள்ளது. அதேபோல மினியேச்சர்கள் நிறைய உள்ளன.
    கிளிக் ஆர்ட் மியூசியம் இந்தியாவில் 19 மியூசியம் இருக்கிறது என்று கூறியுள்ளார் ஸ்ரீதர். அமெரிக்க சுதந்திர தேவி மினியேச்சர் உள்ளது. புனே ஸ்மார்ட் சிட்டி மினியேச்சர் பண்ணிட்டு இருக்கோம் என்று கூறினார்.

    China president visits India Artist Sreethar painting Modi

    ஓவியம் ராஜாபரணி என்பவரிடம் கற்றுக்கொண்டேன். ராமன் ஆர்ட்ஸ்சில் கற்றுக்கொண்டேன். படிப்பு சுமாராக வந்தது. அசிஸ்டென்ட் டிசைனராக வேலை செய்து கற்றுக்கொண்டேன். பெரிய லாங் ஜர்னி. நாம டெடிகேட் பண்ணிக்கணும். இப்ப வருகிறவர்கள் அதை புரிந்து கொண்டால் சாதிக்கலாம். எடுத்த உடனே அதிகம் எதிர்பார்க்கக் கூடாது. விஸ்காம், டிஎப்டி படிப்பவர்கள் டெடிகேசனோடு உழைத்தால் ஜெயிக்க முடியும். 33 வருடங்களாக போராடி இருக்கிறேன். இந்த இடத்தை அடைவதற்கு மிகப்பெரிய போராட்டம் இருக்கிறது. கமல் சார், ஜாகிர் ஹூசைன் போன்றோரின் அறிமுகம் கிடைத்தது.
    என்னை விட பெரிய ஆட்கள் இருக்கிறார்கள். எனக்கு கேமராவின் மீது ஆசை உள்ளது. 10 கேமராக்கள் முதலில் வாங்கினேன். 1000 கேமராக்கள் வைத்திருந்தேன். 7000 கேமராக்கள் வரை சேர்த்திருக்கிறேன். இது ஒரு ஹாபிதான் என்று கூறியுள்ளார்.

    English summary
    China President Visit India, Artist AP Sreethar painting, Modi Jinping meeting, சீனா அதிபர் ஜின்பிங் வருகை, மாமல்லபுரத்தில் மோடி ஜின்பிங் சந்திப்பு, ஓவியர் ஸ்ரீதர் பெயிண்டிங்
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X