twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குறையும் கொரோனா.. சீனாவில் மீண்டும் உயிர்த்தெழும் தியேட்டர்கள்.. மக்கள் வர பிரத்யேக ஏற்பாடுகள்!

    |

    சின்ஜியாங்: கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    Recommended Video

    யாரும் வெளியே வராதீங்க! கண் கலங்கிய வடிவேலு

    கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம் சீனாவில் மூடப்பட்ட திரையரங்குகளை, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் திறக்க சீன அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

    அதன் முதற்கட்டமாக 500 தியேட்டர்களை சின்ஜியாங், ஷாங்காய் உள்ளிட்ட மாகாணங்களில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    குறையும் கொரோனா

    குறையும் கொரோனா

    சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது மரண வேட்டையை நிகழ்த்தி வருகிறது. சீனர்களின் கடும் முயற்சியினால், தற்போது, கொரோனா வைரஸ் அங்கு கட்டுக்குள் வந்துள்ளதாகவும், உயிரிழப்புகள் கணிசமாக குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வீட்டிலேயே அடைந்து கிடந்த சீனர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தலை காட்டி வருகின்றனர்.

    ஏப்ரலில்

    ஏப்ரலில்

    இந்நிலையில், முடங்கிக் கிடக்கும் தியேட்டர்களை மீண்டும் உயிர்த்தெழ செய்யும் நடவடிக்கைகளில் சீன அரசும், சினிமா துறையும் இறங்கி உள்ளது. பல வணிக நிறுவனங்களும், வர்த்தக மையங்களும் கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்பட்டு வரும் நிலையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் சீனாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டு புதிய படங்களை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    அவதார்.. அவெஞ்சர்ஸ்

    அவதார்.. அவெஞ்சர்ஸ்

    முதற்கட்ட பரிசோதனை முயற்சியாக உலகளவில் பிரம்மாண்ட வசூலை ஈட்டிய அவதார், அவெஞ்சர்ஸ் எண்ட் கேம், இன்செப்ஷன், இன்டர்ஸ்டெல்லார் மற்றும் பிளாக்பஸ்டர் அடித்த சில சீன படங்களை முதலில் களமிறக்க சீனா முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக சின்ஜியாங் மாகாணத்தில் 500 தியேட்டர்களை திறக்க முடிவு செய்துள்ளது.

    சோஷியல் டிஸ்டன்ஸ்

    சோஷியல் டிஸ்டன்ஸ்

    கொரோனா வைரஸ் மீண்டும் பரவாமல் தடுக்க, சினிமா தியேட்டர்களில், ஒரு வரிசைக்கு ஒரு டிக்கெட் வீதம் விற்கவும் சீனாவின் சினிமா துறை மற்றும் தியேட்டர்கள் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவை அடுத்து மிகப்பெரிய சினிமா மார்க்கெட்டை கொண்டுள்ள சீனாவின் திரையுலகம் மீண்டு எழுவது, திரைத்துறைக்கு கிடைத்துள்ள வரப்பிரசாதம் என்றே கருதப்படுகிறது.

    English summary
    As the number of new cases of the coronavirus declines in China, the Chinese government is allowing a few movie theaters to reopen for the first time since the country's theaters were shuttered by decree in January.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X