twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இங்கேயும் பண்ணியாச்சு ரீமேக்... 20-ல் ரிலீஸ் ஆகிறது சைனீஷ் 'த்ரிஷ்யம்'

    By
    |

    சென்னை: சீனா மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள த்ரிஷ்யம் படம் வரும் 20 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

    மோகன் லால், மீனா, ஆஷா சரத் உட்பட பலர் நடித்து ஹிட்டான மலையாள படம், 'த்ரிஷ்யம்'. ஜீத்து ஜோசப் இயக்கியிருந்த இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், சிங்களம் உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிப் பெற்றது.

    chinas Drishyam is set to hit theatres, trailer goes viral

    இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கனும், தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷூம், கன்னடத்தில் ரவிச்சந்திரனும் நடித்திருந்தார்கள்.

    தமிழ் ரீமேக்கான பாபநாசம் படத்தில் கமல்ஹாசனும், கவுதமியும் நடித்திருந்தனர். இதை மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே இயக்கியிருந்தார்.

    chinas Drishyam is set to hit theatres, trailer goes viral

    இப்போது இதே படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சீன மொழியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்துக்கு, ஷீப் வித்தவுட் ஷெப்பர்ட் (Sheep Without A Shepherd) என்று டைட்டில் வைத்துள்ளனர்.

    இதில் யாங் சியோ, சுஹோ டன், ஜோன் சென் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். சாம் குவா இயக்கியுள்ளார்.

    இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. படம், வரும் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. டிரைலரை பார்த்தால், த்ரிஷயத்தை அப்படியே சுட்டிருப்பதாகவே தெரிகிறது.

    English summary
    Malayalam movie ‘Drishyam’ directed by Jeethu Joseph with Mohanlal in the lead role was one of the biggest hits in 2013. Now, a Chinese version of the movie is set to hit theatres on December 20.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X