சயீரா நரசிம்ம ரெட்டி படத்தை எப்ப ரிலீஸ் பண்ணுவீங்க… சிரஞ்சீவியிடம் கேட்ட மகேஷ் பாபு
ஹைதராபாத்: சயீரா நரசிம்ம ரெட்டி படத்தில் உங்களின் நடிப்பை பார்த்து நான் வியந்து மிரண்டு போனேன். அந்த திரைப்படம் எப்போது ரிலீஸ் செய்வீர்கள் என்று ஒரு ரசிகனாக நான் ஆவலோடு காத்திருக்கிறேன் என்று நடிகர் மகேஷ் பாபு அந்த படத்தின் ஹீரோ நடிகர் சிரஞ்சீவியிடம் தெரிவித்துள்ளார்.
திரைப்படங்கள் என்பது வாழ்வின் ஒரு பகுதி. பொதுமக்களுக்கு மிக பெரிய பொழுதுபோக்கு அம்சமாக தெலுங்கு சினிமா இருந்துள்ளது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

தெலுங்கு சினிமாவின் 25 ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டமாக சினி மஹோத்சவம் பெரிய விழாவாக ஐதராபாத் சிட்டியில் கச்சிபோலி இன்டோர் ஸ்டேடியத்தில் கொண்டாடப்பட்டது.
சமூகத்திற்கு தெலுங்கு சினிமாவின் பங்களிப்பை இந்த நிகழ்வு மூலம் திரையுலக பிரபலங்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். செப்டம்பர் 8ஆம் தேதி இரவு நடந்த இந்த நிகழ்வில் டோலிவுட்டின் அனைத்து பிரபலங்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைந்தனர்.
பல கலை நிகழ்ச்சிகள், நடிகைகளின் நடனங்கள் என குதூகலமாக கொண்டாடப்பட்டது. இதில் டோலிவுட்டின் மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இருவரும் இணைந்திருக்கும் ஃபோட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த இரு பெரிய ஸ்டார்களும் இணைந்திருக்கும் அரிய புகைப்படம் சினி மஹோத்சவம் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது.
சூப்பர் ஸ்டாராக இருப்பினும் மகேஷ் பாபு தனது அபிமானமான சிரஞ்சீவியின் மிகப் பெரிய ரசிகர். அவரை சந்தித்ததில் அவருடன் சில தரமான நேரத்தை பகிர்ந்து கொண்டதில் மன மகிழ்ச்சியடைந்தார்.
அவர்கள் இருவரின் உரையாடலின் போது மகேஷ் பாபு சிரஞ்சீவியின் நடிப்பில் வெளியாக இருக்கும் சயீரா நரசிம்ம ரெட்டியின் பிரமாண்டமான டீஸர் வெளியீடு பற்றியும் அதில் சிரஞ்சீவியின் நடிப்பையும் கம்பீரத்தையும் பார்த்து வியந்து போனதை பற்றியும் கூறினார். மேலும் அப்படத்தின் வெளியீட்டுக்காக ஒரு ரசிகனாக தானும் ஆவலோடு காத்திருப்பதாக தெரிவித்தார். இந்த படம் சிறப்பானதாக அமைய தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார் நடிகர் மகேஷ் பாபு. இது போன்ற பல இனிமையான நிகழ்வுகளுடன் நடைபெற்றது டோலிவுட்டின் 25அவது ஆண்டு வெள்ளிவிழா கொண்டாட்டம்.


Click it and Unblock the Notifications











