“இங்கு கவர் தான் பேசும்.. உண்மை பேசவே பேசாது”.. சின்மயியின் கருத்தால் பத்திரிகையாளர்கள் கோபம்!

தமிழக ஊடகங்கள் குறித்த

Recommended Video

பாடகி சின்மயின் கருத்துக்கு தமிழக பத்திரிகையாளர்கள் கண்டனம்

சென்னை: தமிழக ஊடகங்களை தரக்குறைவாக விமர்சித்து பாடகி சின்மயி வெளியிட்ட டிவிட்டர் பதிவு பத்திரிகையாளர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீ டூ ஹேஷ்டேக் மூலம் பெண்கள் தங்களுக்கெதிராக பாலியல் வன்கொடுமைகள் குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருவது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் சிக்கியது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Chinmayi accusses tamil medias

தமிழ் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகார் பெரும் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் சுசி கணேசன், நடிகர் அர்ஜுன் ஆகியோர் மீதும் பிரபல நடிகைகள் மீ டூ புகார்கள் கூறினர்.

இந்நிலையில், தமிழக ஊடகங்களுக்கு எதிராக சின்மயி வெளியிட்ட டிவிட்டர் பதிவு ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அப்பதிவில் அவர், "என்னுடைய பிரச்சினையை டெல்லி மற்றும் மும்பை மீடியாக்கள் கையில் எடுத்ததால் மட்டுமே தமிழகத்தில் அது பற்றி பேசப்பட்டது. இதனால் அந்த மீடியாக்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். இல்லையென்றால் இங்கிருக்கும் சிலர் இப்பிரச்சினையை ஒன்றும் இல்லாமல் செய்திருப்பார்கள். தமிழகத்தில் உள்ள மீடியாக்கள் எல்லாமே லஞ்சம் பெற்றுக் கொண்டு தான் செய்தி போடுகிறார்கள். இங்கு யாரும் உண்மையைப் பேசுவதில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

Chinmayi accusses tamil medias

தமிழக ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் மூலமே இந்தப் பிரச்சினை மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. சின்மயியின் புகார் குறித்து, பல பிரபலங்களிடமும் ஊடகங்களால் கருத்து கேட்கப்பட்டது. ஊடகங்களின் பங்களிப்பினாலேயே மேலும் பல பெண்கள் தங்களது பாலியல் துன்புறுத்தல் குறித்து பொதுவெளியில் பேச முன்வந்தனர்.

ஆனால், இதனையெல்லாம் மறந்து, தமிழக ஊடகங்களை காசு வாங்கிக் கொண்டு, ஒரு தலைப்பட்சமாக செய்தி வெளியிடுபவர்கள் என தரக்குறைவாக சின்மயி விமர்சித்திருப்பது பத்திரிகையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக சின்மயிக்கு எதிரான கண்டனங்கள் அதிகரித்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X