twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலியல் புகார் தெரிவித்த சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கம்: '96' தான் கடைசி படமா?

    By Siva
    |

    Recommended Video

    சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து நீக்கம் | ராதாரவி பற்றி சின்மயி- வீடியோ

    சென்னை: சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து பாடகி சின்மயி நீக்கப்பட்டுள்ளார்.

    கோலிவுட்டில் கவிப்பேரரசு வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார் பாடகி சின்மயி. மேலும் சினிமா டப்பிங் கலைஞர் சங்கத் தலைவர் ராதாரவி மீது பாலியல் புகார் தெரிவித்த 2 பெண்களுக்கு சின்மயி ஆதரவு தெரிவித்தார்.

    இந்நிலையில் அவர் சினிமா டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    சின்மயி

    டப்பிங் யூனியனில் இருந்து நான் நீக்கப்பட்டுள்ளேன். இனி என்னால் தமிழ் படங்களுக்கு டப்பிங் பேச முடியாது. கடந்த 2 ஆண்டுகளாக சந்தா செலுத்தாததால் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் என் டப்பிங் வருமானத்தில் இருந்து தவறாமல் 10 சதவீதம் மட்டும் எடுத்துள்ளனர்.

    உறுப்பினர்

    டப்பிங் யூனியன் இப்படி செய்யும் என்று எதிர்பார்த்தேன். என்னை மீண்டும் உறுப்பினராக ஏற்றுக் கொள்வார்களா என்று தெரியவில்லை. என்னிடம் சொல்லாமலேயே முடிவு எடுத்துள்ளனர். நான் இசை நிகழ்ச்சிக்காக இன்னும் அமெரிக்காவில் தான் உள்ளேன்.

    96

    96 தான் என் கடைசி படமாக இருக்கும் போன்று. தமிழில் டப்பிங் பேசுவதை நல்ல படத்துடன் முடித்துக் கொள்கிறேன்.( 96 படத்தில் த்ரிஷாவுக்கு சின்மயி தான் டப்பிங் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.)

    ரூ. 5 லட்சம்

    நான் இனிமேல் டப்பிங் பேச முடியாது என்று ராதாரவி தெரிவித்துள்ளார். யூனியன் எனக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். அபராதத் தொகையை செலுத்துமாறு கூறியிருக்க வேண்டும். உறுப்பினர் கட்டணமாக ரூ. 5 லட்சம் செலுத்துமாறு டப்பிங் யூனியன் கேட்டுள்ளது. இது காரணமே இல்லாமல் நிர்ணயிக்கப்பட்டது.

    தெரியும்

    என் கெரியர் முடிந்துவிடும் என்று எனக்கு தெரியும். அதிகாரம் படைத்தவர்கள் சமூகத்தை ஆள்கிறார்கள். தவறு செய்தவர்களை கேள்வியே கேட்கக் கூடாது. அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. அத்தனை புகார்கள் எழுந்தும் ராதாரவி இன்னும் டப்பிங் யூனியன் தலைவராக உள்ளார்.

    English summary
    Singer Chinmayi tweeted that, 'Sooo given to understand that I have been terminated from the dubbing union. Which means I can longer dub in Tamil films henceforth. The reason stated is that I haven’t paid ‘subscription fees’ for 2 years though this hasn’t stopped them from taking 10% off my dubbing income.'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X