வைரமுத்துவை பிளாக்மெயில் செய்தார் சின்மயி: ராதாரவி

By Siva

Recommended Video

சின்மயி சொல்வது எல்லாம் பொய் - ராதாரவி- வீடியோ

சென்னை: சின்மயி சொல்வது எல்லாம் பொய் என்று டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

சின்மயி 2 ஆண்டு சந்தா செலுத்தவில்லை என்று கூறி அவரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து நீக்கியுள்ளனர். ஆனால் தான் வாழ்நாள் உறுப்பினருக்கான கட்டணத்தை வங்கி மூலம் செலுத்தியதாக சின்மயி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராதாரவி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

வைரமுத்து

வைரமுத்து

சின்மயி வைரமுத்து உள்ளிட்டோர் மீது பாலியல் புகார் தெரிவித்து பிளாக் மெயில் செய்தார். அங்கு ஒன்றும் நடக்கவில்லை என்பதால் உடனே டப்பிங் சங்கத்தின் பக்கம் திரும்பிவிட்டார். சின்மயி முருகா என்றால் கூட மீ டூ தான் நினைவுக்கு வருகிறது. சின்மயியை டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியது தேர்தல் ஆணையர் வாசுகி அம்மாள். நீக்கிய பிறகு அவர் சங்கம் பற்றி பேசக் கூடாது.

வங்கி கணக்கு

வங்கி கணக்கு

வாழ்நாள் உறுப்பினர் சந்தாவை வங்கி கணக்கு மூலம் பணம் செலுத்தியதாக சின்மயி கூறுவது பொய். வைரமுத்து விஷயத்தில் அவர் கூறிய பாஸ்போர்ட் கதை போன்று தான் வங்கிக் கணக்கு கதையும். எல்லாமே பொய். வாழ்நாள் உறுப்பினர் அடையாள அட்டையை காட்டச் சொல்லுங்கள் பார்ப்போம்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

சின்மயி யார் மீது வேண்டுமானாலும் மீ டூ புகார் தெரிவிக்கட்டும். ஏன் அவர் பிறந்தபோதே மீ டூ நடந்தது என்று கூட சொல்லட்டும். அவர் யார், யாரின் பெயர்களை கூறி பணம் பெற நினைக்கிறாரோ அவர்களின் பெயரை சொல்லட்டும். அதற்கும் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கியதற்கும் தொடர்பு இல்லை.

டப்பிங் சங்கம்

டப்பிங் சங்கம்

சின்மயி உள்நோக்கத்துடன் தான் மீ டூ புகார் தெரிவித்து வருகிறார். தற்போது மீ டூவை ஆறப்போட்டுவிட்டு டப்பிங் சங்கம் பக்கம் வந்துள்ளார். நான் விஷாலுக்கு ஆதரவாக பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். விஷால் ஒரு வீட்டிற்கு இரவு 3 மணிக்கு வந்துவிட்டு 5 மணிக்கு சுவர் ஏறி குதித்துச் சென்றதாக கூறுகிறார்கள். அதுவரை அவர் பாலியல் குற்றம் செய்ய முயற்சி செய்தாரா? அப்படி இல்லையே. அதனால் தான் சொல்கிறேன். இது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள குற்றம் என்கிறார் ராதாரவி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X