twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இவர் அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா...ட்விட்டரில் கொந்தளித்த சின்மயி

    |

    சென்னை : நடிகரும், பாஜக பிரமுகருமான ராதாரவி, தமிழ்நாடு திரைப்பட டப்பிங் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார். தற்போது மூத்த பெண் டப்பிங் கலைஞர் ஒருவருக்கு ராதாரவி தடை விதித்துள்ளார். இதற்கு சின்மயி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது பற்றி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில், மற்றொரு மூத்த டப்பிங் கலைஞர் ஒருவரை ராதாரவி தடை செய்துள்ளார். அவரை ஏற்க கூடாது என அனைத்து ஸ்டூடியோக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இவரின் அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா. எத்தனை காலத்திற்கு நாங்கள் இதை பொறுப்பது என குறிப்பிட்டுள்ளார்.

    Chinmayi calls out actor-politician for banning a dubbing artist

    ஏற்கனவே நயன்தாரா பற்றி மோசமாக ராதாரவி பேசியது சர்ச்சையாக்கப்பட்டது. இதனால் அவர் திமுக.,வில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதைத் தொடர்ந்து பாஜக.,வில் சேர்ந்த ராதாரவி, சமீபத்தில் தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது நயன்தாரா பற்றி மீண்டும் தரக்குறைவாக பேசினார்.

    Chinmayi calls out actor-politician for banning a dubbing artist

    இதற்கு முன்பும் சின்மயி உடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து தடை செய்தார். இதற்கு சின்மயி கடும் கண்டனம் தெரிவித்தார். இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சிம்மயியின் ட்விட்டர் பதிவிற்கு ஆதரவுகள் குவிந்து வருகிறது. ஏன் தமிழ் சினிமாவில் ராதாரவியின் செயல்பாடுகளை யாரும் கண்டிக்கவில்லை, கேள்வி கேட்கவில்லை என இணையதள வாசிகள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    English summary
    singer Chinmayi Sripada lashed out at him for getting a veteran dubbing artist banned from working in the Tamil film industry.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X