twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டமா? எதிர்ப்பை கிளப்பிய சின்மயி.. டிரெண்டாகும் ஹாஷ்டேக்!

    |

    சென்னை: எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தின் சார்பாக பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வரும் டிசம்பர் 28ம் தேதி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.

    மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டத்தை வழங்கவுள்ளார்.

    முன்னதாக 2007ம் ஆண்டு தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைக்கழகம், 2008ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், 2009ம் ஆண்டு பாரதியார் பல்கலைக் கழகங்கள் வைரமுத்துவுக்கு கெளரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன.

    ஆனால், மீ டூ விவகாரம், இந்து கடவுளை அவமதித்தல் என பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கக்கூடாது என ட்விட்டரில் வைரமுத்து என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி நெட்டிசன்கள் தற்போது போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

    மீ டூ விவகாரத்தில் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்த பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சின்மயி கண்டனம்

    பாலியல் தொல்லைக் கொடுத்ததாக பாடலாசிரியர் வைரமுத்து மீது இதுவரை 9 பெண்கள் புகார் அளித்துள்ளனர். ஆனால், அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அவருக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டாக்டர் பட்டம் கொடுக்கவுள்ளார் என ட்வீட் போட்டு தனது கண்டனத்தை தொடர்ந்து பல ட்வீட்கள் மூலம் தெரிவித்து வருகிறார். விருது வழங்கும் பல்கலைக் கழகத்தையும் அவர் சாடியுள்ளார்.

    ராஜ்நாத் சிங்குக்கு ரெக்வஸ்ட்

    பாலியல் புகார்களில் சிக்கியுள்ள வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் வழங்கக் கூடாது என்றும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என்றும் பல நெட்டிசன்கள் ராஜ்நாத் சிங்குக்கு ரெக்வஸ்ட் வைத்து வருகின்றனர்.

    ஆண்டாளை அவமதித்தவர்

    இந்து கடவுள் ஆண்டாளை தேவதாசி என அவமதித்தவர் வைரமுத்து, மேலும் அவர் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை கொடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நீங்கள் பங்கேற்க வேண்டாம் என இந்த நெட்டிசனும் ராஜ்நாத் சிங்குக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

    பங்கேற்க வேண்டாம்

    ஆண்டாள் குறித்து தவறான கருத்தை வெளியிட்ட வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் அளிக்கும் விழாவில் ராஜ்நாத் சிங் பங்கேற்க வேண்டாம் என தொடர்ந்து நெட்டிசன்கள் மற்றும் அவரது கட்சித் தொண்டர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

    சின்மயி குற்றச்சாட்டு

    பெண்களுக்கு பாலியல் தொல்லைகளை கொடுத்து விட்டு, பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் கூலாக அவர் வேலை பார்த்து வருகிறார். அவரை எதிர்த்து போராடி வரும் தனக்குத் தான் வேலை இல்லாமல் இங்கு செய்யப்படுகிறது என்றும் சின்மயி குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

    English summary
    Poet Vairamuthu gets an another doctorate for his Tamil works on coming Saturday December 28th. Rajanath singh will present the doctorate honour. Chinmayi and several netizens deliver their condemns.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X