#MeToo பிசினஸ் ரொம்ப கேவலம்: இந்த நடிகை இப்படி பேசிட்டாங்களேன்னு அழுத சின்மயி

By Siva

சென்னை: மீ டூ குறித்து மூத்த நடிகை சவுகார் ஜானகி பேசிய வீடியோவை பார்த்து கண்ணீர்விட்டதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட், பாலிவுட்டை அடுத்து கோலிவுட்டிலும் மீ டூ தலை தூக்கியது. ஆனால் தலை தூக்கிய வேகத்தில் அடங்கிவிட்டது. மீ டூ என்று கூறியவர்களின் நிலையை பார்த்துவிட்டு பாதிக்கப்பட்டவர்கள் கூட பேசத் தயங்குகிறார்கள்.

இந்நிலையில் மூத்த நடிகை சவுகார் ஜானகி மீ டூ பற்றி பேசினார். அவர் கூறியதாவது,

விளம்பரம்

விளம்பரம்

மீ டூ மிகவும் வருத்தம் அளிக்கிறது. இந்த மாதிரி ஒரு கீழ்த்தரமான விளம்பரத்திற்காக என்றைக்கோ நடந்தது, நடக்காதது, நடந்திருக்க வேண்டியது நீ ஒத்துக் கொண்டு ஓகே என்று நினைத்தது இன்று வேறு மாதிரியாக போனது. இதெல்லாம் தேவையா வெளியில கொண்டு வந்து. உனக்கு அப்பொழுது சூட் ஆச்சு நீ வாயை மூடிக்கிட்டு கிடந்த. இப்போ மீ டூன்னு எவனோ ஹாலிவுட்ல சொன்னான், பாலிவுட்ல சொன்னான்னு. என்ன கேவலங்க அது.

வாழ்க்கை

வாழ்க்கை

யாரை புண்படுத்துகிறது. உன் குடும்பம், புருஷன், குழந்தைகளை புண்படுத்துகிறது. இலை மறைவாக காய் மறைவாக இருந்தால் தான் வாழ்க்கை. இந்த மீ டூ பிசினஸ் வந்த பிறகு டிவி, பத்திரிகையை அடிக்கடி பார்ப்பதை நிறுத்திவிட்டேன். இதெல்லாம் பப்ளிக்காக கொண்டு வந்தால் உனக்கென்ன மரியாதை நாளைக்கு. நான் பெண்களுக்காக பேசுபவள். ஆனால் மீ டூவை ஏற்க மாட்டேன் என்று சவுகார் ஜானகி தெரிவித்தார்.

கண்ணீர்

சவுகார் ஜானகியின் பேட்டியை பார்த்துவிட்டு தான் அழுததாக சின்மயி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்ஸ்

ஒரு மூத்த நடிகை இப்படி பேசியது அதிர்ச்சி அளிப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X