'வாடா டேய் எம்புருசா... ஒம் போல பேரழகா பத்து பத்தா பெத்து தாரேண்டா...!' - இது சின்மயி பாட்டு
இது ஒரு படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள்... இந்த வரிகளை ஒரு பாடகி பாட மறுத்து, பின் முழுமையாக பாடலைப் படித்த பிறகு ஒப்புக் கொண்டாராம்.
சாட்டை படத்தைத் தயாரித்த ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ் தயாரிப்பில், மயிலு, ஞாபகங்கள் ஆகிய படங்களை இயக்கிய எம்.ஜீவன் இயக்கி வரும் படம் மொசக்குட்டி.

மொசக்குட்டி மஹிமா
இப்படத்தில் நாயகனாக வீரா என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். நாயகியாக சாட்டை நாயகி மஹிமா நடிக்கிறார்.
பசுபதி, ஜோமல்லூரி, சென்ட்ராயன், எம்.எஸ்.பாஸ்கர், தங்கஸ்வாமி, மீனாள், யார் கண்ணன், மதுமிதா, சிசர் மனோகர், ரிந்துரவி, பிரேம் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

சுகுமார் ஒளிப்பதிவு செய்ய படத்துக்கு ரமேஷ் விநாயகம் இசையமைக்கிறார்.
சின்மயி
இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடகி சின்மயி பாடினால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்து இயக்குநர் ஜீவனும் இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகமும் அவரை வரவழைத்தனர்.
அவரும் ஸ்டூடியோவிற்கு வந்து பாடுவதற்காக மைக் முன் நின்று பாடல் வரிகளை வாங்கி பார்த்து அதிர்ச்சியாகி வெளியே வந்து விட்டாராம்.
இதான் வரிகள்
அப்படி என்ன வரிகள் என்று பார்த்தால்...
"வாடா டேய் எம்புருசா
நான் தாரேன் புதுப்பரிசா
ஒம் போல பேரழகா பத்து பத்தா பெத்து தாரேண்டா...."
இந்த பாடலைப் பாட மிகவும் யோசித்தாராம் சின்மயி.
புது கணவருக்கு பரிசு
உடனே இசை அமைப்பாளர் ரமேஷ் விநாயகம் முழுப் பாடலையும் பாடிக் காட்டியதும், சின்மயி மிகவும் மகிழ்ச்சியாகி, "இந்தப் பாடல் உண்மையிலேயே வரப்போகும் என் கணவருக்கு என்னோட புதுப்பரிசாகத்தான் இருக்கும். என் கேரியரிலும் இது முக்கியமான பாடலாக இருக்கும்," என்று கூறி பாட ஒப்புக் கொண்டாராம்.
அத்தோடு இந்தப்பாடலை எனக்கு கொடுத்ததற்கு மிகவும் நன்றி என மகிழ்ச்சியோடு பாடிக்கொடுத்தாராம். அவரோடு இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் ஹரிசரண்.


Click it and Unblock the Notifications











