லீக்கான ஓவியா வீடியோ?.. சின்மயி கணவர் என்ன சொல்லியிருக்காரு பாருங்க.. கல்லூரியில் நடந்த சம்பவம்!
சென்னை: பாடகி சின்மயியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நடிகர் ராகுல் ரவீந்திரன் நடிகை ஓவியாவின் வீடியோ ஒன்று லீக்காகி டிரெண்டாகி வரும் நிலையில், அது தொடர்பாக மறைமுக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
#OviyaLeaked என்கிற ஹாஷ்டேக் நேற்று முதல் 35 ஆயிரம் ட்வீட்களை கடந்து இந்தியளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது சினிமா துறையை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஓவியாவுக்கு ஆதரவாக சினிமாவில் இருந்து இதுவரை எந்தவொரு பிரபல நடிகைகளோ நடிகர்களோ கருத்து தெரிவிக்கவில்லை.

அந்த வீடியோ டீப் ஃபேக் வீடியோவா? அல்லது ஒரிஜினல் வீடியோவா என்கிற கேள்வியை ஓவியாவிடமே ரசிகர்கள் வைத்த நிலையில், அவர் இதுவொரு மர்மமாக (mystery) இருந்து விட்டு போகட்டும் என்றும் அந்த வீடியோவை பார்த்து என்ஜாய் பண்ணுங்க எனக்கும் லிங்க் அனுப்புங்க என பதிவிட்டு இருப்பது அவரது அக்கவுண்டையும் யாராவது ஹேக் செய்து விட்டார்களா? என்கிற கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஆபாச வீடியோ லீக்: நடிகை ஓவியாவின் அந்தரங்க ஆபாச வீடியோவை மர்ம நபர்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் செய்த நிலையில், பல நெட்டிசன்கள் அந்த வீடியோ வேண்டும் என்றால் டிஎம் பண்ணுங்க, ஃபாலோ பண்ணுங்க, 10 ரூபாய் அனுப்புங்க தருகிறேன் என ட்விட்டரில் வியாபாரம் பார்த்து வருகின்றனர். இளம் பெண்களும் ஓவியாவின் ஆபாச வீடியோ என டிரெண்டாகும் அந்த வீடியோவை காண அதிகளவில் ஆர்வம் காட்ட இந்தியா முழுவதும் அந்த வீடியோ டிரெண்டாகி விட்டது.

ராகுல் ரவீந்தர் மறைமுக கருத்து: கல்லூரியில் படிக்கும் போது நண்பன் ஒருவன் நடிகையின் லீக்கான வீடியோவை தன்னிடம் காட்டும் போது ஆர்வமாக பார்த்தேன். ஆனால், கொஞ்ச நேரத்தில் அந்த வீடியோ எடுத்தது குறித்து அந்த நடிகைக்கு தெரியாததை அறிந்து வேதனைப்பட்டு இனிமேல் இது போன்று லீக்காகும் வீடியோக்களை பார்க்கப் போவதில்லை என்கிற முடிவுக்கு வந்தேன்.
நடிகைக்கு பாதிப்பு: ஆபாச வீடியோக்களை பார்க்கும் ஆர்வத்தில் இளைஞர்கள் அந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து பார்த்து வருகின்றனர். ஆனால், அதன் மூலம் பாதிக்கப்பட்ட நடிகைக்கு நீங்காத வடு ஏற்பட்டு விடும். அவருக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு யார் பொறுப்பேற்க முடியும் என சின்மயி கணவர் ராகுல் ரவீந்தர் குறிப்பிட்டு ட்வீட் போட்டுள்ளார். அவர் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட மோசமான கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











