twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாற்றத்தை கொண்டு வருவேன்... ராதாரவிக்கு எதிராக அதிரடியாக களத்தில் குதித்தார் சின்மயி

    By
    |

    சென்னை: டப்பிங் யூனியனில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்று நம்புவதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

    பின்னணிப் பாடகி சின்மயி, மீடு தொடர்பாக சமூக ஊடகங்களில் கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.

    இதன் காரணமாக, சங்க விதிகளை மீறி சின்மயி செயல்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து கடந்த 2018-ஆம் ஆண்டு அவரை சங்கத்தின் தலைவர் ராதாரவி நீக்கினார்.

     சினிமாவில் 50 வருஷம்... ஹேர் ஸ்டைலிஷ்டை பாராட்டிய கங்கனா... 'தலைவி'யின் கிளாசிக் லுக் அவுட்! சினிமாவில் 50 வருஷம்... ஹேர் ஸ்டைலிஷ்டை பாராட்டிய கங்கனா... 'தலைவி'யின் கிளாசிக் லுக் அவுட்!

    இடைக்காலத் தடை

    இடைக்காலத் தடை

    இதனால் தமிழ் படங்களில் டப்பிங் பேச அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து தெலுங்கு படங்களுக்கு பேசி வந்தார். பின்னர், டப்பிங் யூனியனின் தடையை எதிர்த்து சின்மயி வழக்குத் தொடர்ந்தார். டப்பிங் கலைஞர் சங்கத்தில் இருந்து நீக்கி பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு, நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

    யூனியன் தேர்தல்

    யூனியன் தேர்தல்

    இந்நிலையில், டப்பிங் யூனியன் தேர்தல் வரும் 15ம் தேதி நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ராமராஜ்யம் என்ற அணியின் சார்பில் பின்னணி பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி போட்டியிடுகிறார். ராமராஜ்யம் முதல் டப்பிங் படம் என்பதால் அந்த பெயரில் அணி உருவாக்கியுள்ளனர்.

    வாக்குவாதம்

    வாக்குவாதம்

    இதற்காக இவர் நேற்று மனு தாக்கல் செய்ய, சென்னை வடபழனியில் உள்ள டப்பிங் யூனியன் அலுவலகத்துக்கு வந்தார். 'டப்பிங் யூனியனில் இருந்து நீக்கப்பட்ட சின்மயி உள்ளே வரக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் தலையிட்டு சமாதானப்படுத்தி அவரை உள்ளே அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து சின்மயி மனு தாக்கல் செய்தார்.

    போராட முடியும்

    போராட முடியும்

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சின்மயி, கடந்த தேர்தலில் வெறும் 45 சதவிகித வாக்குகள் மட்டுமே பெற்று ராதாரவி வெற்றி பெற்றார். இந்த முறை நான் போட்டியிடுகிறேன். யூனியனில் மாற்றத்தைக் கொண்டுவருவேன் என்றும் சம உரிமைக்காகப் போராட முடியும் என்றும் நம்புகிறேன். பிரச்னையை சந்திக்கும் உறுப்பினர்களுக்காக எங்கள் அணி போராடும் என்றார்.

    English summary
    Dubbing union election will be held on February 15. Radha Ravi, is contesting for the president’s post again, taking him head-on this time around will be Chinmayi. The singer filed her nomination on Friday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X