சின்மயிக்கு ஆபாச தொல்லை கொடுத்தது இந்த 6 பேர்தான்!

By Sudha

சென்னை: பிரபல பின்னணிப் பாடகி சின்மயிக்கு பல்வேறு வழிகளில் தொல்லை கொடுத்த 6 பேரின் பெயர் விவரம் தெரிய வந்துள்ளது.

7 மொழிகளில் 600 பாடல்கள் பாடியவர்

7 மொழிகளில் 600 பாடல்கள் பாடியவர்

சின்மயி தமிழ் உள்பட ஏழு மொழிகளில் சுமார் 600 சினிமா பாடல்களை பாடி உள்ளார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

சின்மயி சொல்லும் 'செக்ஸ்' புகார் என்ன?

சின்மயி சொல்லும் 'செக்ஸ்' புகார் என்ன?

டிவிட்டர் இணையதளத்தில் என்னைப்பற்றி ஆபாசமான தகவல்களை அனுப்பி மிரட்டி வருகிறார்கள். ஆபாச படங்களையும் வெளியிட்டு விடுகிறார்கள். டிவிட்டரில் வெளியிடப்பட்ட இதுபோன்ற ஆபாச படங்களையும், தகவல்களையும் நாங்கள் தடுத்துவிட்டோம். இருந்தாலும் பேஸ் புக்கில் இதுபோல் ஆபாச தகவல்களையும், படங்களையும் தொடர்ந்து அனுப்பி வருகிறார்கள்.

நீ தமிழச்சியா..?

நீ தமிழச்சியா..?

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யார்? என்பதை நான் கண்டு பிடித்து, போனில் பேசி கண்டித்துவிட்டேன். கண்டிக்கும்போது என்னை கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறார்கள். எனது சாதியை சொல்லி இழிவான வார்த்தைகளால் திட்டுகிறார்கள். நீ ஒரு தமிழச்சியா என்று கேட்கிறார்கள்.

6 பேர்தான் இதற்குக் காரணம்

6 பேர்தான் இதற்குக் காரணம்

எனக்கு தொல்லை கொடுக்கும் 6 பேர் பெயர், அவர்கள் முகவரி போன்றவற்றை நான் புகார் மனுவில் இணைத்துள்ளேன். உதவி பேராசிரியர் ஒருவர் கூட அதில் இருக்கிறார். போலீசார் இவர்களை சட்டப்படி என்ன செய்வார்களோ, அதை செய்யப்பட்டும்.

யார் அந்த 6 பேர்?

யார் அந்த 6 பேர்?

சின்மயிக்கு, அவினாசியைச் சேர்ந்த ராஜன் மற்றும் செந்தில்குமார், மந்திரமூர்த்தி, சரவணகுமார், ராமநாதன் ஆகியோர்தான் தொல்லை கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X