பாடகி சின்மயி- ராகுல் ரவீந்திரன் திருமணம் நடந்தது
பின்னணிப் பாடகி சின்மயி - ராகுல் ரவீந்திரன் திருமணம் இன்று காலை நடந்தது.
பிரபல பின்னணிப் பாடகி சின்மயி. பாடல்களால் மட்டுமல்ல, அவ்வப்போது சமூக வலைத் தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் கூறி பரபரப்புக்குள்ளானவர்.

ராகுல் ரவீந்திரன்
இவருக்கும் நடிகர் ராகுல் ரவீந்திரனுக்கும் காதல் ஏற்பட்டு, திருமணத்தில் முடிந்தது. ராகுல் ரவீந்திரன் மாஸ்கோவின் காவேரி படத்தில் நடித்தவர்.

நிச்சயதார்த்தம்
இருவருக்கும் நேற்று முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்தது. இன்று காலை எளிமையாக, இந்து முறைப்படி இருவருக்கும் திருமணம் நடந்தது.

உறவுகள் - நண்பர்கள் மட்டும்
இந்தத் திருமணத்துக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே சின்மயி - ராகுல் அழைத்திருந்தனர். திருமணத்துக்கு அதிக செலவு செய்ய விரும்பவில்லை என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

வேண்டாம் அன்பளிப்பு
இந்தத் திருமணத்துக்கு வரும் யாரும் அன்பளிப்பு எதுவும் தர வேண்டாம் என்றும், பூக்கள், பொக்கேக்களுக்கு செலவழிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.

நன்கொடை
மேலும் தங்கள் திருமணத்தையொட்டி ரூ 17 ஆயிரத்தை லடாக் பகுதியில் உள்ள ஒரு அறக்கட்டளைக்கு உதவித் தொகையாக வழங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











