twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இயக்குனரை விளாசிய சின்மயியின் அம்மா

    By Siva
    |

    சென்னை: சின்மயியை நளினகாந்தி படத்தில் பாடல் பாட கேட்டதற்கு அவரின் அம்மா கடுமையாக பேசியுள்ளார்.

    சராசரி கதைக்களம் தயாரிப்பில் பொன் சுகிர் எழுதி இயக்கியிருக்கும் படம் நளினகாந்தி. ஜெயபாலன், கஸ்தூரி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சாரா தயாரித்துள்ளார். சமூகத்திற்கு கரு்தது தெரிவிக்கும் வகையில் படித்துமா பகுத்தறிவு இன்றி சாதி மோகத்தில் அலைவது என்ற பாடல் அந்த படத்தில் இடம் பெற்றுள்ளது.

    Chinmayis mom talks rudely to a director

    பாடலாசிரியர், இயக்குனர் பொன் சுகிர் அவரகளுடன் கலந்துரையாடல்.

    இந்தப் பாடல் உருவான கதை தான் என்ன?

    நான் இந்தப் பாடலை இந்த இராகத்தில் அமைக்கவே எழுதினேன். இப்படியான சமூக நீதிப்பாடல்கள் கச்சேரிகளில் பாடப்பட வேண்டும் என எண்ணினேன். இதைப் பல பிரபல கர்நாடக சங்கீத பாடகர்களிடம் கொடுத்தேன். ஆனால் யாரும் இதைப்பாட முன் வரவில்லை. இந்தப் பாடல் கிடைத்தபின் நண்பரகளாக இருந்த பலர் என்னுடன் பேசுவதை தவிர்த்தனர்.

    Chinmayis mom talks rudely to a director

    அப்போ எப்படித்தான் இந்தப் பாடல் உருவானது?

    இந்தப் பாடலை நான் இயக்கியுள்ள நளினகாந்தி படத்தில் இடம்பெற வைக்கலாம் என முடிவு செய்தேன். அதற்காக சின்மயியை பாட வைக்கலாமென கூற பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சின்மயிடம் கேட்ட பொழுது அவரும் எந்த பதிலும் தரவில்லை. அதன் பின் அவர் அம்மாவிடம் பேசிய போது அவரோ தன் மகளை தயவு செய்து விட்டு விடுங்கள் என மிகவும் கடுமையாக பேசினார்.

    Chinmayis mom talks rudely to a director

    கடைசியாக யார் தான் பாடினார்?

    லால்குடி ஜெயராமனின் மாணவியான ஷ்ரேயா தேவ்நாத் அவர்கள் இதை மிகுந்த ஆர்வத்துடன் பாடி ஒப்பேற்றினார். அவருக்கு மிகுந்த நன்றி.

    Chinmayis mom talks rudely to a director

    இதற்கு இசையமைத்தது?

    இந்த பாட்டிற்கு மிக அருமையாக ஜூட் ஆரோகணம் இசையமைத்து மெருகூட்டியுள்ளார். ஜூட் தான் எனது நளினகாந்தி படத்தின் முழு இசையையும் அமைத்திருக்கின்றார்.

    Chinmayis mom talks rudely to a director

    உங்கள் படத்தைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்

    நளினகாந்தி படம் ஒரு பிரபல வைத்தியர் மனநிலை பாதிக்கப்படும் வேளையில் அவரை பராமரிக்க வந்த பெண் படும் இன்னல்களையும் அவளுக்கு சமுதாயத்தால் ஏற்படும் தாக்கங்களையும் சித்தரிக்கும் ஒரு திரை ஓவியம். இதில் இந்திய தேசிய விருது பெற்ற நடிகர், கவிஞர் வை ஐ ச ஜெயபாலன் அவர்களுடன் கஸ்தூரி, புவிஷா, ஷார்மிலா, ஸலீமா என பலர் நடித்திருக்கின்றனர். நளினகாந்தி என்பது ஒரு கர்நாடக இராகத்தின் பெயர். இந்த இராகம் மனநிலை பாதிக்கபட்டவர்களை குனப்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்தது. இந்தப் படத்தைப் பற்றிய செய்திகள் விரைவில் வரும்.

    இந்தப் பாடலைப் பற்றி?

    இந்தப் பாடலை கச்சேரிகளில் பாடுமாறு நான் எல்லா கர்நாடக பாடகர்களையும் வேண்டுகிறேன். அவர்களை மட்டுமல்ல எவர் வேண்டுமானாலும் பாடுங்கள். சமூகத்தில் இந்தப் பாடல் மாற்றம் ஏற்றபடுத்த உதவுங்கள்.

    Chinmayis mom talks rudely to a director

    வேறு?

    இந்தப் பாட்டுக்கேற்ற காணொளியையும் எவர் வேண்டுமானாலும் செய்யலாம். அதை எங்களுக்கு அனுப்பினால் [email protected] நாம் அதை நமது இனையத்தளத்தில் பிரசுரிப்போம்.

    English summary
    Nalinakanthi director cum lyricist Pon Suhir said that Chinamayi's mom spoke rudely when he approached her to ask about her daughter singing a song in the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X