தேவதாசி முறை சூப்பர் சிஸ்டம்.. சின்மயி தாயார் சர்ச்சை.. அம்மாவிற்காக பகிரங்க மன்னிப்பு கேட்ட மகள்!

தேவதாசி முறைங்கிறது இந்த பூமிக்கு, மண்ணுக்கு, பாரத தேசத்துக்கு சொந்தமானது என்று தனது தாயார் பேசியதற்காக சின்மயி டிவிட்டரில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

சென்னை: தேவதாசி முறைங்கிறது இந்த பூமிக்கு, மண்ணுக்கு, பாரத தேசத்துக்கு சொந்தமானது என்று தனது தாயார் பேசியதற்காக சின்மயி டிவிட்டரில் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார்.

#metoo உலகம் முழுக்க பெரிய அளவில் விவாதிக்கப்பட்ட சமயத்தில் பல முக்கிய நபர்கள் அதில் சிக்கினார்கள். இந்தியாவில் வடக்கில் பலர் இதனால் விமர்சனத்திற்கு உள்ளானார்கள். தமிழகத்திற்கு #metoo டிரெண்டை கொண்டு வந்தவர் பாடகி சின்மயி.

எந்த நடவடிகைக்கும் அஞ்சாமல் மீ டூ மூலம் பல பேர் குறித்து வெளிப்படையாக இவர் புகார் அளித்தார். அதேபோல் பல பெண்கள் வெளியே வந்து பேசவும் இவர் ஊக்குவித்தார்.

தாயார்

தாயார்

இந்த நிலையில் சின்மயி தாயார் இதற்கு எதிர்மறையாக பேசி உள்ளார். அவர் தனது பேச்சில், தேவதாசி முறைங்கிறது இந்த பூமிக்கு, மண்ணுக்கு, பாரத தேசத்துக்கு சொந்தமானது. அது எப்பேர்பட்ட ஒசத்தியான சிஸ்டம். அதை சிதைச்சதனால நான் பெரியாரை மன்னிக்க மாட்டேன், என்று தனியார் செய்தி நிறுவன விவாத நிகழ்ச்சியில் பாடகி சின்மயி தாயார் குறிப்பிட்டு இருந்தார்.

சர்ச்சை

சர்ச்சை

அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையானது.இந்த வீடியோவை பலரும் இணையத்தில் பகிர்ந்து கடும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். சின்மயி பெண்கள் குறித்து முற்போக்கான கருத்துக்களை பகிர்கிறார்.

ஆணாதிக்கம்

ஆணாதிக்கம்

ஆணாதிக்கம் குறித்தும், பெண் பாதுகாப்பும் குறித்தும் பேசுகிறார். மிக முக்கியமாக #metoo மூலம் பலரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருக்கிறார். அப்படி இருக்கும் போது அவரின் தாயார் இப்படி பேசியது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கேள்வி

கேள்வி

இது தொடர்பாக சின்மயியை டேக் செய்து பலரும் கேள்வி எழுப்பினார்கள். உங்கள் தாயார் பேசியது தவறு. கண்டனத்திற்கு உரியது. சமூக மாற்றத்தை முதலில் உங்கள் தாயிடம் இருந்து தொடங்குங்கள் என்று குறிப்பிட்டனர்.

எப்படி

எப்படி

இதற்கு தற்போது சின்மயி பதில் அளித்துள்ளார். அதில், தேவதாசி முறையை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். என்னுடைய அம்மாவுடைய கருத்துல எனக்கு உடன்பாடில்ல. எங்க அம்மாவுடைய கருத்துகளால் என்ன தேவதாஸி ஆகுன்னு சொல்றது நியாயமும் இல்லை.

அவங்கதான்

அவங்க செயலுக்கு அவங்கதான் பொறுப்பு. ஆனாலும் மனம் புண்பட்டவர்களுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன், என்று சின்மயி தனது டிவிட்டில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X