'எனக்கு பிடித்த சில நியூட் புகைப்படங்கள்'... நெட்டிசனை அலறியடித்து ஓடவிட்ட பாடகி சின்மயி!

தன்னிடம் ஆபாசமாக நடந்துகொண்ட இணையதள ஆர்வலர் ஒருவருக்கு, நெற்றியடி பதில் கொடுத்துள்ளார் பாடகி சின்மயி.

சென்னை: நிர்வாணப் புகைப்படங்களை கேட்ட நெட்டிசனுக்கு பாடகி சின்மயி நெற்றியடி பதில் கொடுத்துள்ளார்.

பாடகி சின்மயி சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரக்கூடியவர். இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் சொந்த வாழ்க்கை உள்பட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

இதனால் அவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கிறார்கள்.

வில்லங்கமான பதிவு

வில்லங்கமான பதிவு

இந்நிலையில் சின்மயியை பின்தொடரும் ஒரு நபர், வில்லங்கமான பதிவு ஒன்றை செய்தார். அதாவது, சில நிர்வாண புகைப்படங்களை அனுப்பும்படி சின்மயியை அவர் கேட்டார்.

சின்மயி நெற்றியடி பதில்

இதற்கு டென்ஷன் ஆகாமல் கூலாக, அதேசமயம் நெற்றியடியாக பதில் அளித்துள்ளார் சின்மயி. நியூட் எனும் லிப்ஸ்டிக் புகைப்படங்களை போட்டு, 'எனக்கு பிடித்த சில நியூட்ஸ்' என பதில் அளித்துள்ளார் அவர்.

சின்மயிக்கு பாராட்டு

சின்மயியின் இந்த சாமர்த்தியமான பதிலை பலரும் பாராட்டியுள்ளனர். "நியூட் போட்டோ கேட்டவர் இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்", என சிலர் கேலி செய்துள்ளனர். மற்றும் சிலர், "நீங்கள் அந்த நபரை ஏமாற்றிவிட்டீர்கள்", என சின்மயியை நக்கல் செய்துள்ளனர்.

தெறித்து ஓடினார்

சம்மந்தப்பட்ட நபரின் புகைப்படத்துடன் ஸ்கிரீன்ஷாட் எடுத்து சின்மயி இந்த டிவிட்டை பதிவிட்டுள்ளார். இதனால் அந்த நபர் தனது கணக்கை டெலிட் செய்துவிட்டு, டிவிட்டரில் இருந்தே வெளியேறிவிட்டார். இதனை ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X