பேருந்தில் சிறுமியை அந்த இடத்தில் தொடுறான்.. இதுவும் காமெடியா? பரிதாபங்கள் டீமை விளாசும் சின்மயி!

சென்னை: கடந்த மாதம் கேரளாவில் பேருந்தில் கூட்ட நெரிசலின் போது தன்னை பாலியல் நோக்கத்துடன் சீண்டியதாக, பெண் ஒருவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோ பெரும் புயலை கிளப்பியது. அந்த வீடியோவில் ஏற்பட்ட தாக்கத்தின் வடுவே இன்னும் மறையாத நிலையில், பாடகி சின்மயி மற்றுமொரு பகீர் வீடியோவை வெளியிட்டு கேள்வி கேட்டுள்ளார்.

கோழிக்கோட்டை சேர்ந்த தீபக் என்பர் பேருந்தில் கண்ணூருக்குப் பயணம் செய்துள்ளார். அப்போது, தீபக்குடன் அதே பேருந்தில் பயணம் செய்த ஷிம்ஜிதா என்ற பெண். ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், தீபக் பேருந்தில் என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சுமத்தியிருந்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, மன உளைச்சலுக்கு ஆளான தீபக் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Chinmayi Sripaada Harassment
Photo Credit:

கேரள பேருந்து விவகாரம்: இதையடுத்து, தீபக்கின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியதாக அந்த பெண் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அந்த பெண் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு அவதூறு வீடியோவை வெளியிட்டதாக இணையத்தில் பலர் அந்த பெண் ஷிம்ஜிதாவை கடுமையாக திட்டித்தீர்த்தன. நம்முடைய சமுதாயத்தில் பெண்களுக்கு எப்போதுமே சட்டம் ஆதரவாக தான் இருக்கிறது. ஆனால், நிறைய பெண்கள் இதை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்று சொல்லப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் பரிதாபங்கள் யூடியுப் சேனலில், சுதாகர் மற்றும் கோபி இருவரும் கேரளா பேருந்து சம்பவம் குறித்து நகைச்சுவையாக ஒரு வீடியோவை போட்டு இருந்தனர்.

சிறுமியிடம் ச்சீ: இந்நிலையில், பாடகி சின்மயி தனது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பேருந்தில் ஒரு சிறுமியிடம் ஒரு ஆண் அத்துமீறி நடந்து கொள்கிறான். இதை வீடியோ எடுத்த ஒரு பெண், அந்த ஆணை அடித்து உங்க வீட்டில் பெண்கள் இல்லையா.. உன் அம்மா, அக்காவிடம் இப்படி நடந்துக்கோ என அடிக்கிறார்.இந்த வீடியோவை பதிவிட்ட பாடகி சின்மயி, இந்த ஆண் செய்த தவறை அந்த பெண் அம்பலப்படுத்தியதற்காக, அவன் உயிரை மாய்த்துக்கொண்டாடல், பரிதாபங்கள் டீம், அவருக்கும் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோவை உருவாக்குவார்கள் என பதிவிட்டுள்ளார். இதற்கு பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X