பெண் எம்.எல்.ஏவுக்கு முத்தம் கொடுக்க முயன்ற விவகாரம்.. செருப்பால அடிச்சி இருக்கணும்.. சின்மயி!
சென்னை: பெண் எம்.எல்.ஏ ஒருவரை பாய்ந்து சென்று கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றி எம்.எல்.ஏவின் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், பாடகி சின்மயி இதை வன்மையாக கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 102 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, திருவனந்தபுரத்தில் நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்திற்கு காங்கிரஸ் சார்பில் கொல்லம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிந்து கிருஷ்ணா வந்தார். அப்போது, அங்கு வாசலில் நின்று கொண்டிருந்த செரியான் பிலிப், பெண் எம்.எல்.ஏ. வரவேற்க சென்று பாய்ந்து சென்று கட்டி பிடித்து, முத்தம் கொடுக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத, பிந்து கிருஷ்ணா அதிர்ச்சி அடைந்து, செரியான் பிலிப்பின் கையை தட்டி விட்டு தடுக்கிறார். ஆனால், அப்போது, அவர் விடாமல் கட்டி பிடிக்க முயன்றார். செரியான் பிலிப்பின் இந்த செயல் அங்கிருந்தவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் மூலம் இந்த வீடியோ இணையத்தில் வெளியானதை தொடர்ந்து பலரும் செரியான் பிலிப்பை கண்டித்து வருகின்றனர்.

சின்மயி கண்டனம்: இதுகுறித்து பாடகி சின்மயி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், பெண் அரசியல்வாதி அவரை தடுக்கிறார். அதனை பொருட்படுத்தாமல் ஆண் அரசியல்வாதி மீண்டும் மீண்டும் நெருங்குகிறார். இந்த வீடியோ பார்த்த பலரும் அந்த பெண் செருப்பை கழட்டி அடிச்சி இருக்க வேண்டும், ஏன் சிரிக்கிறார்? போன்ற கேள்விகளை கேட்டுள்ளனர். நிஜ வாழ்க்கையில் எல்லா பெண்களும் திரைப்படங்களில் வருவதை போல செருப்பை கழட்டி அடிக்க முடியாது. பெண்கள் பல நேரங்களில் தங்களது பாதுகாப்பு, வேலை, குடும்பம் போன்ற காரணங்களால் நேரடியான எதிர்ப்பை வெளிப்படுத்த அச்சப்படுகிறார்கள். இதனால், சில பெண்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அமைதியாக செல்கிறார்கள். அமைதியாக இருக்கிறார்கள் என்பதற்காக அதை சம்மதமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அரசியல் கட்சிகளில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும், பணி இடங்களில் பாலியல் தொல்லை தடுப்பு குழு (ICC) முறையாக அமைக்கப்பட வேண்டும் என சின்மயி பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications