For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பொய் சொல்லாதீங்க சதீஷ்.. வெளுத்து வாங்கிய தர்ஷா குப்தா.. சின்மயிடம் என்ன சொன்னாரு தெரியுமா?

  |

  சென்னை: ஆடை சர்ச்சை தொடர்பாக நடிகர் சதீஷ் வீடியோ விளக்கம் அளித்த நிலையில், தான் அப்படி உங்க கிட்ட சொன்னேனா என ட்வீட் போட்டு தர்ஷா குப்தா சதீஷ் சொன்ன பொய்யை அம்பலமாக்கி உள்ளார்.

  சதீஷ் பேசிய பேச்சுக்கு ஸ்ரீனிவாஸ், சின்மயி, நவீன் உள்ளிட்ட பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  தர்ஷா குப்தா போட்ட ட்வீட்டை பார்த்து அவருக்கு ஆதரவு தெரிவித்த சின்மயிடம் தர்ஷா குப்தா சொன்ன விஷயம் தீயாக பரவி வருகிறது.

  கத்தி படத்தில் விஜய்யை வயிறு குலுங்க சிரிக்க வைத்த தாத்தா... சதீஷ் சுவாரசிய தகவல்கத்தி படத்தில் விஜய்யை வயிறு குலுங்க சிரிக்க வைத்த தாத்தா... சதீஷ் சுவாரசிய தகவல்

  சதீஷ் சர்ச்சை பேச்சு

  சதீஷ் சர்ச்சை பேச்சு

  ஓ மை கோஸ்ட் பட விழாவில் கலந்து கொண்டு மேடை ஏறி பேசிய நடிகர் சதீஷ் பாம்பேல இருந்து வந்த சன்னி லியோன் சேலை கட்டி எப்படி வந்திருக்காங்க பாருங்க, இங்கே கோயமுத்தூர்ல வந்த நம்ம ஊர் பொண்ணு எப்படி டிரெஸ் பண்ணிட்டு வந்துருக்காங்க பாருங்க.. நீ நிறைய பேசுவேன்னு தெரியும், நான் அப்புறமா கேட்கிறேன் என மேடையிலேயே தர்ஷா குப்தாவின் ஆடை குறித்து கிண்டலாக பேசியது சர்ச்சையாக மாறி உள்ளது.

  சின்மயி விளாசல்

  சின்மயி விளாசல்

  அவ்வளவு பேர் இருக்கும் ஒரு கூட்டத்தில் பெண் ஒருவர் அணிந்துள்ள ஆடை குறித்து சதீஷ் அப்படி பேசியது ஒன்றும் காமெடியாக தெரியவில்லை. எப்போது தான் ஆண்களிடத்தில் இந்த மன நிலை மாறும் என்றே தெரியவில்லையே என விளாசி இருந்தார் சின்மயி.

  மன்னிப்பு கேட்ட ஸ்ரீனிவாஸ்

  மன்னிப்பு கேட்ட ஸ்ரீனிவாஸ்

  பாடகர் ஸ்ரீனிவாஸ் கூட இந்த விஷயத்திற்காக நடிகர் சதீஷை கண்டித்து இருந்தார். ஆனால், தர்ஷா குப்தா சொல்லித்தான் மேடையில் அப்படி பேசினேன் என சதீஷ் வெளியிட்ட விளக்க வீடியோவை பார்த்த பாடகர் ஸ்ரீனிவாஸ், ஸாரி சதீஷ் உங்களை ஹர்ட் பண்ணும் நோக்கில் அப்படி சொல்லவில்லை. பெண்கள் என்ன உடை உடுத்த வேண்டும் என்பது போல நீங்கள் பேசியது எனக்கு பிடிக்கவில்லை எனக் கூறியிருந்தார்.

  என் இன்டென்ஷன் அதுவல்ல

  என் இன்டென்ஷன் அதுவல்ல

  சார், நீங்க போய் ஸாரி எல்லாம் கேட்டுகிட்டு, நான் அந்த இன்டென்ஷன்லையே சொல்லல, ஆனால், அது சிலரை ஹர்ட் ஆக்கி விட்டதை அறிந்து வருத்தப்படுறேன். நான் அப்படி பேசியிருக்கக் கூடாது, இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறேன் என்றும் தர்ஷா குப்தா இதை புரிந்து கொண்டதற்கு நன்றி என்றும் கூறியிருந்தார்.

  பொய் சொன்ன சதீஷ்

  பொய் சொன்ன சதீஷ்

  ஆனால், தர்ஷா குப்தா வெளியிட்ட ட்வீட் சதீஷ் சொன்னதுக்கு நேர்மாறாக இருந்தது தான் அடுத்த பஞ்சாயத்தை ஆரம்பித்து இருக்கிறது. நான் உங்க கிட்ட அப்படி என்ன பத்தி அசிங்கமா மேடையில பேச சொன்னேனா என வெளுத்து வாங்கி உள்ளார் தர்ஷா குப்தா.

  சின்மயி ஆதரவு

  சின்மயி ஆதரவு

  தர்ஷா குப்தா போட்ட ட்வீட்டை பார்த்த சின்மயி அவருக்கு ஆதரவாக ட்வீட் போட்டுள்ளார். சதீஷ் சொன்னதும் நானும் ஓ இப்படியொரு விஷயம் நடந்ததா? நாம தான் எடிட்டுன்னு நினைச்சி தப்பா சொல்லிட்டோமான்னு நினைச்சேன். ஆனால், நீ தைரியமா எதிர்த்து நின்றது தான் சரி. உன் ட்வீட்டை மட்டும் டெலிட் பண்ணிடாதே எனக் கூறி உள்ளார்.

  தர்ஷா குப்தா பதில்

  தர்ஷா குப்தா பதில்

  அப்போ இது ஜோக் என்று நீயும் நினைக்கவில்லையே, எனக் கேட்க "Nop dear. Never." என எப்போதும் அப்படி நினைக்கமாட்டேன் என சதீஷ் செய்த தவறான செயலுக்கு எதிராக உறுதியாக உள்ளார். நடிகர் சதீஷ் தேவையில்லாமல் தர்ஷா குப்தாவின் பெயரை இந்த பிரச்சனையில் கோர்த்து விட்டுள்ள நிலையில், அவர் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

  English summary
  Chinmayi supports Dharsha Gupta for her stand against Sathish in dress controversy. At Sunny Leone's Oh My Ghost pre release function Sathish compares Sunny Leone and Dharsha Gupta dress on stage stirs controversy.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X