சிம்பு ரசிகர்களை பார்த்தால் சின்மயிக்கு சிரிப்பு சிரிப்பா வருதாம்!
Recommended Video

சென்னை: கெட்டவன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ள லேகா வாஷிங்டனுக்கு சின்மயி ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தனக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களின் பெயரை வெளியிடப் போவதாக கூறிய நடிகை லேகா வாஷிங்டன் கெட்டவன் மீ டூ என்று மட்டும் ட்வீட்டினார்.
அதை பார்த்த சிம்பு ரசிகர்கள் கடும் கோபம் கொண்டு அவரை விளாசினார்கள்.
ஆதரவு
லேகா வாஷிங்டன் மிகவும் வெற்றிகரமான, விருது பெற்ற ப்ராடக்ட் டிசைனர். அவரின் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக அற்புதமான தயாரிப்புகளை அளித்துள்ளது. அப்படி இருக்கும் போது அவர் ஒரு ஃபெயிலியர் என்று சில ஆண்கள் சொல்வதை பார்த்து எனக்கு சிரிப்பு வருகிறது என்று சின்மயி ட்வீட் செய்துள்ளார்.

விளாசல்
வாழ்க்கையில் தோல்வி அடைந்த லேகா சிம்புவின் பெயரை சொல்லி பப்ளிசிட்டி தேடுகிறார் என்று எஸ்.டி.ஆர். ரசிகர்கள் அவரை விளாசினார்கள். அதை பார்த்து தான் சின்மயி விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீ டூ
பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறும் அனைத்து பெண்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார் சின்மயி. யார் தன்னை விளாசினாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் குரல் கொடுக்கும் அவருக்கு பாராட்டுகளும், திட்டும் கிடைக்கிறது.
விளக்கம் வேண்டும்
சும்மா கெட்டவன் என்று சொன்னால் என்ன நினைப்பது, லேகா வாஷிங்டன் முறையான விளக்கம் அளிக்க வேண்டும் என்கிறார்கள் சிம்பு ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











