மனநலம் பாதிக்கப்பட்டேனா... அவதூறு கருத்து தெரிவித்த டாக்டர்...கொந்தளித்த சின்மயி

சென்னை : சமீபத்தில் ட்விட்டரில் கிளப்ஹவுஸ் என்ற விவாதம் தளம் புதிதாக துவங்கப்பட்டது. இதில் இணைந்து பொதுவான தலைப்புகளின் மீதான விவாதத்தில் பங்கேற்று, நமது கருத்துக்களை தெரிவிக்கலாம்.

Recommended Video

ClubHouse-ல் அவதூறு கருத்து தெரிவித்த Doctor...கொந்தளித்த Chinmayi | Tamil Filmibeat

ஆனால் இந்த தளத்தை பலரும் பிரபலங்கள் பற்றி அவதூறான, தகாத கருத்துக்களை கூறவே பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தன்னை டாக்டர் என அறிமுகம் செய்த நபர் ஒருவர் பிரபில பின்னணி பாடகி சின்மயி பற்றி அவதூறு கருத்துக்களை கூறி உள்ளார்.

மன்னிப்பை ஏற்க மறுத்த சின்மயி

மன்னிப்பை ஏற்க மறுத்த சின்மயி

இதனால் டாக்டர் அரவிந்த் ராஜா என்ற அந்த நபர் மீது தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக சின்மயி தெரிவித்துள்ளார். அந்த நபர் மன்னிப்பையும் ஏற்க சின்மயி மறுத்துள்ளார்.

சின்மயி பற்றி அவதூறு கருத்து

சின்மயி பற்றி அவதூறு கருத்து

டாக்டர் அரவிந்த் ராஜா என்பவர் கிளப்ஹசில், பாடகி சின்மயி காஞ்சிபுரத்தில் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு மனநல சிகிச்சை பெற்றார் என தெரிவித்துள்ளார். அத்துடன் அவருக்கு சிகிச்சை அளித்த மனநல மருத்துவர் இதனை தன்னிடம் சொன்னதாகவும், சின்மயியின் தற்போதைய மனநலம் குறித்தும் தனக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

விட்டு விலாசிய சின்மயி

விட்டு விலாசிய சின்மயி

மேலும் மீ டூ விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவிற்கு ஆதரவாகவும், சின்மயி உள்ளிட்ட மற்ற பெண்கள் மீது அவதூறாகவும் கருத்து தெரிவித்துள்ளார். இதற்காக அந்த டாக்டருக்கு சின்மயி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவரை கடுமையாக விமர்சித்து சமூக வலைதளங்களில் கருத்து விட்டார்.

பேச மறுத்த சின்மயி

இதனையடுத்து அரவிந்த் ராஜா, சின்மயியிடம் பலமுறை மன்னிப்பு கேட்டும் அதனை ஏற்க சின்மயி மறுத்து விட்டார். சின்மயி மற்றும் அவரது தாய்க்கு ஃபோன் செய்துள்ளார். ஆனால் அவரிடம் பேச சின்மயி மறுத்து விட்டார்.

சட்ட நடவடிக்கை எடுப்பேன்

சட்ட நடவடிக்கை எடுப்பேன்

மேலும் டாக்டர் மீது போலீசில் புகார் அளிக்க உள்ளதாகவும், இந்திய மருத்துவ கவுன்சிலிலும் புகார் அளிக்க உள்ளதாகவும் சின்மயி தெரிவித்துள்ளார். சின்மயியின் இந்த முடிவை நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர். பலரும் சின்மயிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X