அவர் தள்ளுறப்போ ரியாக்ஷன பாருங்க.. அஞ்சலியை கண்டித்த சின்மயி.. End Card போட்டாலும் கிளம்புதே
சென்னை: கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஃபேமஸான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் அஞ்சலி இப்போது கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தில் நடித்திருக்கிறார். படத்தின் நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்தது. அதில் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அந்த சமயத்தில் மேடையில் வைத்து அஞ்சலியை அவர் தள்ளிவிடும் வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் சின்மயி ஒரு ட்வீட்டை போட்டிருக்கிறார்.
கற்றது தமிழ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அஞ்சலி தொடர்ந்து பல படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் பாதி வெற்றி, பாதி தோல்வியை சந்தித்தன. இருந்தாலும் அஞ்சலியின் நடிப்புக்கு ஒன்றும் குறையில்லை. மிகச்சிறந்த நடிகை என்ற பெயரையே அவர் பெற்றிருக்கிறார். எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் எல்லாம் அவரது நடிப்பு அவ்வளவு அருமையாக இருக்கும். தமிழ் சினிமா ரசிகர்களும் அஞ்சலியை கொண்டாட ஆரம்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சை: இதற்கிடையே கோலிவுட்டில் பிஸியாக இருந்தபோதே அவரை சுற்றி சர்ச்சைகளும் எழ ஆரம்பித்தன. முக்கியமாக அவரது உறவினர் ஒருவரால் அவர் கட்டுப்படுத்தப்படுகிறார் என்ற சர்ச்சை கோலிவுட்டில் புயல் போல் அடித்தது. மேலும் அந்த சமயத்தில் சினிமாவிலிருந்து ஒதுங்கியும் இருந்தார் அஞ்சலி. அதுமட்டுமின்றி நடிகர் ஜெய்யுடன் இணைத்து வைத்து கிசுகிசுக்கவும் பட்டது. இருவரும் ஒரே வீட்டில் தங்கியிருந்தார்கள் என்றும்; பிறகு பிரிந்துவிட்டார்கள் என்றும் ஓபனாகவே பலரும் பேச ஆரம்பித்தார்கள்.
ரீ எண்ட்ரி: இப்படி தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்துக்கொண்டிருந்த அஞ்சலி இப்போது மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்தவகையில் தமிழில் ஏழு கடல் ஏழு மலை, தெலுங்கில் கேங்ஸ் ஆஃப் கோதாவரி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்போது கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் நிகழ்ச்சியால் அஞ்சலியை சுற்றி புதிய சர்ச்சை ஒன்று எழுந்தது.
என்ன நடந்தது: அதாவது அந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதில் சீனியர் நடிகர் பாலகிருஷ்ணா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது மேடையில் வைத்து அஞ்சலியை அவர் தள்ளிவிடும்படியான வீடியோ ஒன்று வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள் பாலகிருஷ்ணாவுக்கு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களை முன்வைத்தனர்.
இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து அஞ்சலி தனது எக்ஸ் தள பக்கத்தில், "பாலகிருஷ்ணாவும் நானும் பல ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் மதித்துவருகிறோம். கேங்ஸ் ஆஃப் கோதாவரி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டது எங்களுக்கு மிகப்பெரிய சந்தோஷம். அவருடன் நான் மேடையை பகிர்ந்துகொண்டதில் பெருமைப்படுகிறேன்" என்று குறிப்பிட்டு இந்த பஞ்சாயத்துக்கு End Card போட்டார்.
இதற்கிடையே சின்மயி தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த விவகாரம் குறித்து பதிவு ஒன்றை போட்டிருக்கிறார். அதில் அதிகாரத்தில் இருப்பவர்கள் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார்கள் என்கிற ரீதியில் கருத்து தெரிவித்திருக்கும் அவர், மக்களிடம் இதை பகிர்வதிலிருந்து நான் கவனிக்கும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று, அவர் (அஞ்சலி) சிரிப்பதை பாருங்கள்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











