சவுகார் ஜானகி மேடமோட சேர்ந்து அவரும் என்னை அசிங்கப்படுத்தினார்.. டைமிங்கில் நடிகரை வாரும் பாடகி!

சென்னை: தன்னைப்பற்றி சவுகார் ஜானகியும் ஒய்ஜி மகேந்திரனும் அளித்த பழைய பேட்டியை தற்போது மேற்கோள் காட்டியுள்ள பாடகி சின்மயி யாரும் மாறவில்லை என தெரிவித்திருக்கிறார்.

பின்னணி பாடகியான சின்மயி பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். கடந்த எழுந்தது மீடூ அமைப்பில் கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் ,கூறியிருந்தார்.

சின்மயின் இந்த புகாரால் ஒட்டு மொத்த திரைத்துறையும் அதிர்ச்சியடைந்தது. இதனை தொடர்ந்து பல்வேறு மிரட்டல்களுக்கு ஆளானார் சின்மயி.

சைட் அடிக்கதான் போராட்டம்

சைட் அடிக்கதான் போராட்டம்

இந்நிலையில் மாணவர்களின் போராட்டம் குறித்து நடிகர் ஒய்ஜி மகேந்திரன் கடுமையாக சாடியிருந்தார். மாணவர்கள் பெண்கள் சைட் அடிக்க வேண்டும் என்பதற்காகவும், லீவு கிடைக்கும் என்பதற்காகவும் போராட்டம் நடத்துவதாக கருத்து தெரிவித்தார்.

வச்சு செய்யும் சின்மயி

வச்சு செய்யும் சின்மயி

அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் சின்மயி தனது டிவிட்டர் பக்கத்தில் இதுதான் நேரம் என நடிகர் ஒய்ஜி மகேந்திரனை வச்சு செய்து வருகிறார்.

ஜாதியை பார்ப்பதால்

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டுகளில், மீடூ இயக்கத்தில் உள்ள நம் பெண்களால் சவுகார் ஜானகியுடன் அவர் ஒரு நேர்காணலை நடத்தினார். அந்த நேர்காணலில் அவரும் கூப்புடுறா கும்பிடுறா என்று கூறினார். கருத்தையும் கூறினார். நீங்கள் எனது சாதியையும் அவருடைய ஜாதியையும் பார்ப்பதால் என்னால் எனது நிலைப்பாட்டை ஒவ்வொரு முறையும் விளக்க முடியாது என்று கூறியுள்ளார்.

முடிஞ்சா போய் பாருங்கோ..

மற்றொரு டிவிட்டில் சவுகார் ஜானகி மேடமோட சேர்ந்து இவரும் என்னை அசிங்கப்படுத்தினவருதான், சேத்த முடிஞ்சா அந்த இன்டர்வியூவ போயி பாருங்க. அவர பத்தி நிறைய பேசியாச்சு. ஆனா அதை கவனிக்க காமன் சென்ஸ் வேணுமே. முதல்ல ஜாதிய பாத்து பேசிட்டுதானே வேற பேச்சே உமக்கு என்று கூறியிருக்கிறார்.

யாரும் மாறல..

மேலும் நுரைதள்ள பாப்பாத்தி, மாமின்னு டிவிட் பண்றவங்களுக்கு இந்த ஒரு வர்ஷத்துல இவங்க எல்லாம் மாறின மாதிரி தெரியல. இவரா இருந்தாலும் சரி, பாக்யராஜ் அய்யாவ இருந்தாலும் சரி உங்க கவிஞர் அய்யாவ பத்தி உண்மைய சொன்னதுக்கு செதச்சுருவேன்னு மிரட்டுன திரு ராஜனாக இருந்தாலும் சரி... என கடந்த ஆண்டு சவுகார் ஜானகியும் ஒய்ஜி மகேந்தினும் தன்னை பற்றி நேர்காணலில் பேசியதையும் மேற்கோள் காட்டியிருக்கிறார் சின்மயி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X