சமந்தாவுக்கு ஆதரவாக வந்த சின்மயி கணவர்.. யாரு வந்தாலும் தப்பு தப்பு தான்.. ஒரே போடாக போட்ட டாக்டர்!
சென்னை: நடிகை சமந்தா திடீர் டாக்டராக மாறி மாற்று மருத்துவத்தை கடைபிடிக்கலாம் என்கிற அட்வைஸை தனது ரசிகர்களுக்கு வழங்கிய நிலையில், சமந்தா செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றும் அவரை சிறையில் தள்ள வேண்டும் என லிவர் டாக் எனும் ட்விட்டர் ஐடியை பயன்படுத்தி வரும் மருத்துவரும் ஹெல்த் இன்ஃப்ளூயன்ஸருமான சிரியாக் அபி பிலிப்ஸ் சாட்டையடி பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
உடனடியாக பல்டி அடித்த சமந்தா தனக்கு இப்படி மாற்று மருத்துவத்தை பயன்படுத்த சொன்னதே 25 வருடங்கள் டிஆர்டிஓவில் மருத்துவராக இருந்தவர் தான். நீங்க வேண்டுமானால் அவருடன் விவாதம் நடத்துங்க, என்னை ஏன் இப்படி மோசமா பேசுறீன்க்க என நேற்று 3 பக்கத்துக்கு அறிக்கை வெளியிட்டார்.

அதை பார்த்த டாக்டர் பிலிப்ஸ் மீண்டும் சமந்தா செய்தது தப்பு தான் அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார். இந்நிலையில், பாடகி சின்மயின் கணவரும் நடிகருமான ராகுல் ரவிந்திரன் சமந்தாவுக்கு ஆதரவாக அந்த டாக்டருக்கு ஒரு பெரிய ட்வீட்டை போட அதற்கும் பதிலடி கொடுத்துள்ளார் அந்த மருத்துவர்.
சமந்தா பட ஹீரோ: பாடகி சின்மயியை திருமணம் செய்துக் கொண்ட நடிகர் ராகுல் ரவிந்திரன் சினிமாவில் ஹீரோவாக மாஸ்கோவின் காவேரி படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே சமந்தாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தான் அந்த படத்தின் இயக்குநர். அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து சமந்தாவின் நண்பராகவே ராகுல் ரவிந்திரன் உள்ள நிலையில், சமந்தாவை சகட்டு மேனிக்கு விளாசிய மருத்துவரிடம் சமந்தாவுக்காக பேசியுள்ளார் ராகுல் ரவிந்திரன்.

மருத்துவரிடம் விவாதிக்கலாமே: நடிகை சமந்தா சொல்வது போல அந்த மருத்துவரிடம் நீங்கள் விவாதம் செய்யலாமே, மருத்துவ உலகில் ஒரு மருத்துவர் ஒரு விஷயத்தையும் இன்னொரு மருத்துவர் வேறு மாதிரியான சிகிச்சையையும் வழங்கி வரும் நிலையில், அங்கேயே குழப்பம் நீடித்து வரும் சூழலில் மருத்துவ அறிவு இல்லாத சாதாரண மக்களை போலத்தான் சமந்தாவும் அவரை ஏன் நீங்க கடுமையாக விமர்சிக்கிறீங்க என கேள்வி எழுப்பி உள்ளார் ராகுல் ரவிந்திரன்.

ராகுலுக்கு விளக்கம்: சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 35 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். சுமார் 3.5 கோடி பேர் சமந்தா சொல்வதை கேட்கும் இடத்தில் உள்ளனர். சமந்தாவுக்கு அது செட் ஆகிறது என்பதற்காக தவறான மருந்தை மற்றவர்களுக்கு ஏன் அவர் பரிந்துரைக்க வேண்டும் என ராகுலிடம் பிலிப்ஸை கேள்வி எழுப்ப, நீங்க சொல்வது சரிதான் டாக்டர் என ராகுல் ரவிந்திரன் சைலன்ட் ஆகிவிட்டார். சமந்தா விவகாரம் சோஷியல் மீடியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஜுவாலா கட்டா பதில்: ஹைட்ரோஜன் பெராக்ஸைடை சுவாசிக்கக் கூடாது என்றும் அது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் பிலிப்ஸ் தடுத்து வரும் நிலையில், சமந்தா ஹைட்ரஜன் பெராக்ஸைடை சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ளார். சோஷியல் மீடியாவில் பல பிரபலங்கள் சமந்தா சொல்வது முற்றிலும் தவறு என்றும் தனிப்பட்ட முறையில் மக்கள் மருந்துகளை எடுக்கக் கூடாது. உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவர்களை அணுகி அவர்களின் அறிவுரை பேரில் தான் மருந்துகளை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். விஷ்ணு விஷாலின் மனைவி ஜூவாலா கட்டாவும் லிவர் டாக்கிற்கு தான் ஆதரவு தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











