Don't Miss!
- News வெப்ப அலைக்கு பேரு என்ன தெரியுமா? தமிழ்நாட்டுக்கு மஞ்சள் அலர்ட்! மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கன்ஃபார்ம் ஆகிடுச்சு.. இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற போறது இவங்க தான்.. அடுத்தவாரம் இவர்?
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்றும் அடுத்த வாரம் யார் வெளியேற உள்ளார் போன்ற தகவல்கள் கசிந்துள்ளன.
அக்டோபர் 3ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்று வாரங்களை கடந்துள்ளது.
நமீதா மாரிமுத்து, நாடியா சங் மற்றும் அபிஷேக் ராஜா இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்கள்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எப்படி வெளியேறினேன் தெரியுமா? ஓப்பனாக சொன்ன அபிஷேக் ராஜா!
இந்த முறையும் இருக்காரு
திங்கட் கிழமை தீயில் போட்டியாளர்களின் பெயர்களை எரிய வைத்து நடந்த நாமினேஷனில் அந்த போட்டியாளரின் பெயர் இடம்பெற்று இருந்தது. கடந்த முறை போட்டோக்களை எரித்ததற்கு கடும் கண்டனங்கள் கிளம்பிய நிலையில், இந்த முறை பெயர்களை மட்டுமே போட்டு எரித்தனர்.
யார் யார்
அபிநய், பாவனி ரெட்டி, அக்ஷரா ரெட்டி, சின்ன பொண்ணு, இமான் அண்ணாச்சி, இசைவாணி, வருண், பிரியங்கா உள்ளிட்டோர் நேற்று நடந்த நாமினேஷனில் இடம்பிடித்துள்ளனர். இந்த 9 பேரில் ஒருவர் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற உள்ளார்.
யாருக்கு கம்மி
இந்த பட்டியலை பார்த்தாலே யாருக்கு குறைவான ஓட்டுக்கள் கிடைக்கும் என்பதை சுலபமாக கணித்து விடலாம். சின்னப் பொண்ணு மற்றும் அபிநய்க்கு தான் குறைவான ஓட்டுக்கள் கிடைக்கும் என பிக் பாஸ் ரசிகர்களே கமெண்ட்டுகளை தெறிக்க விட ஆரம்பித்து விட்டனர்.
சின்னப் பொண்ணு தான்
கடந்த மூன்று வாரங்களாக பிக் பாஸ் வீட்டில் தாக்குப் பிடித்து இருந்த சின்னப் பொண்ணு தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகிறார் என ஏகப்பட்ட நெட்டிசன்களே கன்ஃபார்ம் பண்ணி ட்வீட்களை போட்டு வருகின்றனர். மேலும், சின்னப் பொண்ணு கேமே விளையாடவில்லை அவரை இந்த வாரம் வெளியே அனுப்பிடுங்க என்கிற கோரிக்கையும் எழுந்து வருகிறது.
அடுத்த வாரம் அபிநய்
அதே போல ஜெமினி கணேசனின் பேரன் அபிநய்யும் இந்த பிக் பாஸ் வீட்டில் ஒரு செட் ப்ராப்பர்ட்டி போலவே உள்ளார் என்றும் பாவனி அவரை பங்கமாக நோஸ் கட் பண்ணிவிட்டு நிரூப் உடன் சேர்ந்து விட்டார் என்றும் நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்கிற ரீதியில் சின்னப் பொண்ணுவிற்கு பதிலாக இந்த வாரம் அபிநய் கூட வெளியேற வாய்ப்பிருக்கு. ஆனால், இந்த வாரம் சின்னப் பொண்ணு அடுத்த வாரம் அபிநய் வெளியேறிவிடுவார் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளன. வெயிட் பண்ணி பார்ப்போம்.