சூர்யாவுக்கு வாழ்த்து சொன்ன சின்ன தல சுரேஷ் ரெய்னா: அந்த கோரிக்கை இன்னும் அப்படியே தான் இருக்கு!

சின்ன தல என கிரிக்கெட் ரசிகர்களால் அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, நடிகர் சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.

Recommended Video

Soorarai Pottru National Award | ஜெயிச்சிட்டோம் மாறா | வென்று காட்டிய சூரரைப் போற்று *India

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக கலக்கிய சுரேஷ் ரெய்னா, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காவும் பல வெற்றிகளை பதிவு செய்துள்ளார்.

சுரேஷ் ரெய்னா தோனியின் செல்லப் பிள்ளையாக வலம் வருவதால், ரசிகர்கள் அவரை செல்லமாக சின்ன தல என்று அழைப்பது வழக்கம்.

அதிரடி மன்னன்

அதிரடி மன்னன்

இடக்கை பேட்ஸ்மேனான சுரேஷ் ரெய்னா, இந்திய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான வீரராக விளங்கினார். இக்கட்டான தருணங்களில் திக்குமுக்காடிய இந்திய அணிக்கு பல போட்டிகளில் அதிரடியாக வெற்றிகளைத் தேடித் தந்த பெருமை சுரேஷ் ரெய்னாவுக்கு உண்டு. பேட்டிங் மட்டும் இல்லாமல் பீல்டிங்கிலும் பலே கெட்டிக்காரர் இவர். அசுர வேகத்தில் வரும் பந்துகளை சீறிப் பாய்ந்து அலேக்காக தடுப்பதில், இவரை மிஞ்ச ஆள் கிடையாது.

சூப்பர் கிங்ஸ் டூ சின்ன தல

சூப்பர் கிங்ஸ் டூ சின்ன தல

ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதில் இருந்தே, கூல் கேப்டன் தோனியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பயணித்து வந்தார் ரெய்னா. தோனியுடன் இவருக்கு இருக்கும் மிக நெருங்கிய நட்பை கண்ட ரசிகர்கள், ரெய்னாவை சின்ன தல என்று அழைக்கத் தொடங்கினர். இந்திய அணியைப் போலவே சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் தனது அதிரடியான பேட்டிங்கால் பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார்.

சூர்யாவுடன் நட்பு

சூர்யாவுடன் நட்பு

தமிழ்த் திரைப்படங்களை அதிகம் விரும்பி பார்க்கும் ரெய்னா, சூப்பர் ஸ்டார் ரஜினி, சூர்யா இருவருக்கும் தீவிரமான ரசிகராக காணப்படுகிறார். மேலும், ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க சென்னை வரும்போது, சூர்யாவுடன் நெருங்கி பழகும் வாய்ப்புகளும் ரெய்னாவுக்கு கிடைத்தன. இருவரும் சினிமாவில் இணைந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என்ற அளவிற்கு, ரசிகர்களும் இவர்களின் நட்பை சிலாகித்தனர்.

பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் வாழ்த்து

இந்த நிலையில், பிறந்தநாள் கொண்டாடும் சூர்யாவிற்கு சின்ன தல ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். "இந்தாண்டு உங்களுக்கு எல்லாமே சிறப்பாக அமையும்" எனவும் சூர்யாவை, ரெய்னா மனதார வாழ்த்தியுள்ளார். ரெய்னாவின் இந்த ட்வீட்டை, சூர்யா, ரெய்னா இருவரது ரசிகர்களும் வைரலாக்கி வருகின்றனர்.

அந்த கோரிக்கை!

அந்த கோரிக்கை!

கடந்தாண்டு ஒருநிகழ்ச்சியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ரெய்னா, சூர்யாவிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார். அதாவது, விளையாட்டு வீரர்களின் பயோபிக் திரைப்படங்கள் அதிகம் வெளியாகி வரும் நிலையில், ரெய்னாவிடம் உங்கள் பயோபிக் திரைப்படம் உருவாகுமா? என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். மேலும், அதில் உங்கள் பாத்திரத்தில் யார் நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் கேட்டனர். அப்போது சற்றும் யோசிக்காத ரெய்னா, சூர்யா நடித்தால் தரமாக இருக்கும் எனக் கூறியிருந்தார். ரெய்னாவின் ஆசை இந்தாண்டாவது நிறைவேறுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X