சின்னத்தம்பி படத்தில் கவுண்டமணி மனைவியாக வரும் நடிகை அனுஜா.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
சென்னை: பிரபு,குஷ்பு நடிப்பில் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் தான் சின்னத்தம்பி. இந்த படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் காமினேஷன் சூப்பராக இருக்கும் இப்படத்தில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானவர் தான் நடிகை அனுஜா. இவரின் சமீபத்திய திரைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் தான் பி. வாசு. இவர் பன்னீர் புஷ்பங்கள் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ள பி வாசுவின் இயக்கத்தில்,1991ஆம் ஆண்டு வெளியாகி தியேட்டரில் பல நாட்கள் ஓடியத் திரைப்படம் தான் சின்னத்தம்பி. இந்த படத்தில் பாட்டு மட்டுமே பாடத்தெரிந்த ஊர் உலகம் தெரியாத அப்பாவியாக நடித்திருந்தார் பிரபு.

சின்னத்தம்பி: இந்த படத்தில் இடம் பெற்ற அரைச்ச சந்தனம் பாடலில் வரும் குஷ்புவை மட்டும் காண தியேட்டருக்கு தினமும் ஏராளமான ரசிகர்கள் வந்து சென்றார்கள். அதேபோல இந்த படத்திற்கு பின் குஷ்புவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி இருந்தார்கள். இந்த படம் வெளியான பின்னர் தான் குஷ்புவிற்கு கோவில் கட்டினார்கள். இப்படம் கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
கவுண்டமணி : மேலும், இந்த படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி வழக்கம் போல ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்தது. இதில் கவுண்மணி ஆறு மணிக்கு மேல் கண்ணு தெரியாத மாலைக்கண் நோயாளியாக நடித்திருப்பார். அந்த படத்தில் வரும் டேய் தகப்பா… ஆறு மணிக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் வேலை செய்ய மாட்டேனு என்னே சொல்ல வெச்சிட்டியேடா… என்று பேசும் வசனம் கவுண்டமணியின் எவர் கிரீன் காமெடியாக உள்ளது.

இந்த படத்தில் கவுண்டமணியின் மனைவியாக நடித்தவர் தான் அனுஜா ரெட்டி. அந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் பலராலும் பேசப்பட்டது. 1986 ஆம் ஆண்டு இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான முதல் வசந்தம் திரைப்படத்தின் மூலம், சினிமாவில் அறிமுகமான இவர், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் சுமார் 200 படங்களில் நடித்துள்ளார். அண்மைக்காலமாக சினிமாவில் தலைகாட்டாமல் இருந்த இவரின் தற்போதைய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த போட்டோவை பார்த்த பலர் அந்த நடிகையா இவங்க என்று கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











