ஜோஷ் ஆப்பில் இணைந்த ஹிப் ஹாப் தமிழா.. சின்னப்பையன் பாடலுக்கு வீடியோ போடுங்க.. பரிசை வெல்லுங்க!

இந்தியாவின் மிகப்பெரிய ஷார்ட் வீடியோ செயலியான ஜோஷ் (Josh) ஆப், தனது வித்தியாசமான கன்டென்ட்கள் மூலம் வீடியோ உலகில் புதிய உயரம் தொட்டு இருக்கிறது. கடந்த 2020ம் வருடம்தான் இந்த செயலி தொடங்கப்பட்டு இருந்தாலும் ஏற்கனவே இது டாப் ஷார்ட் வீடியோ செயலியாக உருவெடுத்துவிட்டது. அதேபோல் கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த மேடை அமைத்து கொடுப்பதிலும் ஜோஷ் (Josh) செயலிதான் நம்பர் ஒன்.

Chinnapaiyan Challenge: Participate in Josh Music Artist Hiphop Tamizhas Latest Song

கன்டென்ட் க்ரியேட்டர்களை தாண்டி மியூசிக் வீடியோ க்ரியேட்டர்களையும் வெகுவாக ஊக்குவித்து வருகிறது இந்த ஆப். சமீபத்தில் இந்த ஜோஷ் ஆப்பில் தமிழ் இசையுலகின் இரு பிரபலங்களான ஹிப் ஹாப் ஆதி மற்றும் ஜீவா இணைந்துள்ளனர். இவர்கள் இருவரும் தான் ஹிப் ஹாப் தமிழா என்கிற பெயரில் ஒன்றாக இணைந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.

ஹிப் ஹாப் ஆதி சினிமாவில் இசையமைப்பாளராக நுழைந்து ஹீரோவாகவும் மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Chinnapaiyan Challenge: Participate in Josh Music Artist Hiphop Tamizhas Latest Song

இந்நிலையில், சமீபத்தில் ஹிப் ஹாப் தமிழா டீம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்ட சின்ன பையன் பாடல் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்து 5 லட்சம் வியூஸ் மற்றும் 50 ஆயிரம் லைக்குகளை யூடியூபில் அள்ளி உள்ளது. சின்ன பையன் பாடலின் சிறப்பு என்னவென்றால் சுதேசி பாடகரான வைசாக் இணைந்து அந்த பாடலை பாடியுள்ளார். காக்கா கதை, என் ரேண்ட்ட கொஞ்சம் கேளு உள்ளிட்ட பாடல்களை அவர் முன்னதாக பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Chinnapaiyan Challenge: Participate in Josh Music Artist Hiphop Tamizhas Latest Song

இந்நிலையில், அந்த பாடலை மேலும், பிரபலப்படுத்தும் விதமாக ஜோஷ் ஆப் வாடிக்கையாளர்களுக்கு ஒரு போட்டியை நடத்தி வருகின்றனர். செப்டம்பர் 7ம் தேதி தொடங்கியுள்ள இந்த போட்டி ஒரு வாரம் தொடர உள்ளது. சின்ன பையன் பாடலுக்கு பக்காவாக நடனமாடி வீடியோ பதிவிடும் ஜோஷ் ஆப் க்ரியேட்டர்களுக்கு ஹிப் ஹாப் ஆதி சார்பில் ஒரு சூப்பர் பரிசு காத்திருக்கிறது.

இன்னும் எதுக்கு வெயிட் பண்றீங்க.. உடனடியாக உங்க மொபைல் போனில் ஜோஷ் ஆப்பை ஓப்பன் பண்ணி ஒரு சூப்பர் டான்ஸ் போட்டு வீடியோவை அப்லோடு பண்ணுங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X