7 வயதில் காமராஜ் அய்யா முன்னாடி பாடினேன்.. சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்த பிரபல காமெடி நடிகர்!
சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகரான சின்னி ஜெயந்த் தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் காமராஜருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் சின்னி ஜெயந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அவர் முன் தான் பாடிய அனுபவங்களையும் ரசிகர்களுடன் சின்னி ஜெயந்த் பகிர்ந்துள்ளார்.

சின்னி ஜெயந்த்
இயக்குநர் மகேந்திரனின் கை கொடுக்கும் கை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் சின்னி ஜெயந்த். காதலர் தினம், கண்ணெதிரே தோன்றினால், இதயம் என ஏகப்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்தவர் சின்னி ஜெயந்த்.

கவுண்டமணி காதலி
நூற்றுக்கணக்கான தமிழ் படங்களில் காமெடி நடிகனாக நடித்துள்ள சின்னி ஜெயந்த் காமெடி ஜாம்பவான் கவுண்டமணியுடன் இணைந்து காதலர் தினத்தில் கலக்கிய காதல் கமெடி வேற லெவல் ஹிட் அடித்தது. டயானாவாக ஃபேக் ஐடி காதலை அப்பவே திரையில் இருவரும் காட்டி இருந்தனர்.

மிமிக்ரி
சூப்பர்ஸ்டார் ரஜினியின் சிவாஜி படத்தில் சிவாஜி மாதிரி மிமிக்ரி பண்ண சொன்னவுடன், நடிகர் திலகம் சிவாஜி மாதிரி மிமிக்ரி செய்து காமெடியில் கலக்கிய சின்னி ஜெயந்த் மிகப்பெரிய மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட். ஏகப்பட்ட படங்களில் தனது மிமிக்ரி திறமையையும் வெளிப்படுத்தி இருப்பார்.

காமராஜர் உடன்
"7 வயதில் மதிபிற்குரிய திரு. காமராஜ் அய்யா முன்பு பாடினேன் நல்ல கலைஞனாய் வருவாய் என்று ஆசிர்வதித்தார் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்" என நடிகர் சின்னி ஜெயந்த் தற்போது பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகிறது.

பொக்கிஷம்
தன்னலமற்ற தலைவர் என பெயர் எடுத்த காமராஜரிடம் பாடி காட்டிய பாக்கியம் உங்களுக்கு கிடைத்தது மிகப்பெரிய விஷயம் என்றும், இந்த புகைப்படம் தமிழ் சினிமாவின் முக்கியமான பொக்கிஷம் என்றும் ரசிகர்கள் நடிகர் சின்னி ஜெயந்தை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











