கமல்ஹாசனை நேரில் சந்தித்த டோலிவுட், பாலிவுட் சூப்பர் ஹீரோக்கள்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை : நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ளது விக்ரம் படம்.
படம் 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. தொடர்ந்து 9 நாட்களாக படம் வசூல்வேட்டை நடத்தி வருகிறது.
படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் அடுத்தடுத்து திரையரங்குகளுக்கு வரவைத்துள்ளது. அரங்கு கொள்ளாத காட்சிகளாக தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.

விக்ரம் படம்
கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் சூர்யா உள்ளிட்டவர்களின் மிரட்டலான நடிப்பில் உருவாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக 9 நாட்களை கடந்துள்ளது விக்ரம் படம். இந்தப்படத்தின் சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அரங்கு கொள்ளாத காட்சிகள்
தொடர்ந்து வாரயிறுதி நாட்களில் மட்டுமின்றி வார நாட்களிலும் அரங்கு கொள்ளாத காட்சிகளாகவே படம் திரையரங்குகளை ஆட்கொண்டுள்ளது. இந்நிலையில் படத்தின் வசூல் கடந்த 9 நாட்களில் 275 கோடி ரூபாயை கடந்துள்ளது. இன்றைய தினம் 300 கோடி ரூபாய் வசூலை படம் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பான விமர்சனங்கள்
கமல் நடிப்பில் 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ளது விக்ரம் படம். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் வெளியாகியுள்ள 4வது வெற்றிப்படம் என்ற பெருமையும் படத்திற்கு கிடைத்துள்ளது. படம் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. படத்திற்கு சிறப்பான விமர்சனங்களும் கிடைத்துள்ளன.

ரசிகர்கள் கொண்டாட்டம்
இதனிடையே படத்திற்கு சர்வதேச அளவில் சிறப்பான வசூல் கிடைத்துள்ளதுடன், ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் படத்திற்கு தொடர்ந்து பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். படத்தின் ஒவ்வொரு கேரக்டரும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர்
குறிப்பாக பகத் பாசில், விஜய் சேதுபதிக்கு படத்தில் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. இதேபோல படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா மிரட்டியுள்ளார். இந்தக் கதாபாத்திரம் விக்ரம் 3 படத்திற்கான முன்னோட்டமாக படத்தில் காட்டப்பட்டுள்ளது.

கமலை சந்தித்த டோலிவுட், பாலிவுட் ஹீரோக்கள்
இதனிடையே டோலிவுட் மற்றும் பாலிவுட் சூப்பர் ஹீரோக்கள் சிரஞ்சீவி மற்றும் சல்மான் கான் இருவரும் கமல்ஹாசனை ஐதராபாத்தில் நேரில் சந்தித்து படத்தின் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது கமல்ஹாசனுக்கு சிரஞ்சீவி சால்வை போர்த்தினார். சந்திப்பின்போது லோகேஷ் கனகராஜும் உடனிருந்தார்.
Recommended Video

உற்சாகமான கமல்ஹாசன்
கமல்ஹாசனின் நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியாகியுள்ளது விக்ரம் படம். இந்த படத்தின் வெற்றி கொடுத்த சந்தோஷத்தில் தற்போது மிகவும் உச்றாகமாக காணப்படுகிறார் கமல்ஹாசன். தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படம், தன்னுடைய நடிப்பில் ஒரு படம், விக்ரம் 3, விஜய்யுடன் ஒரு படம் என அடுத்தடுத்து திட்டமிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











