சிரஞ்சீவி பர்த்டே..திரைப்பிரபலங்கள் வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்து!

ஹைதராபாத் : தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி இன்று தனது 67வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் திரைப்பிரபலங்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Superstar மகளை தொடந்து Megastar மகளும் விவகாரத்தா?? | Sriji Konidela Removes her husband name

தெலுங்கு சினிமாவில் பல ஆண்டுகளாக வசூல் சக்கரவர்த்தியாக இருந்த வரும் நடிகர் சிரஞ்சீவி இன்று வரை திரைப்படங்களில் தனது துள்ளலான நடிப்பின் மூலமும், அசத்தலான நடனத்தின் மூலமும், கண்ணிமைக்காமல் பார்க்கக்கூடிய ஆக்சன் சண்டைக்காட்சிகளின் மூலமும் இன்று வரை ரசிகர்களை தொடர்ந்து ரசிக்க வைத்து வருகிறார்.

சிரஞ்சீவியின் பிறந்த நாள் ஸ்பெஷலாக இன்று காட்ஃபாதர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சிரஞ்சீவியின் மாஸ் காட்சிகள் உள்ளிட்டவை டீசரில் இடம்பெற்றுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் திரைப்படத்தின் மீதான ஆவல் அதிகரித்துள்ளது.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

சிரஞ்சீவியின் பிறந்த நாளை முன்னிட்டு,மகேஷ்பாபு, சரத்குமார், ராதிகா சரத்குமார்,ராதா ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு தனது ட்விட்டரில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் KChiruTweets ஐயா.. உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் இன்னும் பல வெற்றிகரமான ஆண்டுகள் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

காட்பாதர் வெற்றி பெற வாழ்த்து

காட்பாதர் வெற்றி பெற வாழ்த்து

அதே சரத்குமார், அன்புள்ள சிறுகாரு, இந்த சிறப்பு நாளில் சொர்க்கத்தின் சிறந்த ஆசீர்வாதங்கள் உங்கள் மீது பொழியட்டும். 30 ஆண்டுகளுக்கும் மேலான நட்புப் பிணைப்பை நாங்கள் பகிர்ந்து கொண்டோம், எங்கள் நாட்களின் ஒவ்வொரு நினைவையும் நான் மதிக்கிறேன். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், செல்வந்தராக என்றும் இருக்க இனி பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேலும், வரவிருக்கும் காட்பாதர் படத்திற்கு எனது நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

பிறந்த நாள்வாழ்த்துக்கள்

பிறந்த நாள்வாழ்த்துக்கள்

ராதிகா சரத்குமார் தனது ட்விட்டரில் இனி பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சிரஞ்சீவி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் என்றும் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அன்பான சிரஞ்சீவி

அன்பான சிரஞ்சீவி

நடிகை ராதா நடிகர் சிரஞ்சீவிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறந்த நடிகர், சிறந்த நடனக் கலைஞர், நீங்கள் ஒரு அற்புதமான மனிதர், எங்கள் அன்பான சிரஞ்சீவி காரு, உங்களுக்கு மிகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள், எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தரட்டும் என பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X