Chiranjeevi: தொடரும் தோல்வி... சம்பளத்தை திருப்பிக் கொடுத்த சூப்பர்ஸ்டார்... இதுவும் சோலி முடிஞ்சுதா

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார், மெகா ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் சிரஞ்சீவி.

தெலுங்கில் அவர் நடித்த போலா சங்கர் திரைப்படம் கடந்த வாரம் 11ம் தேதி வெளியானது.

 Chiranjeevi: Chiranjeevi returned his salary for the failure of Bhola Shankar

தமிழில் அஜித் நடித்திருந்த வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவானது போலா சங்கர்.

இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தோல்வியைத் தழுவியதால் தனது சம்பளத்தை திருப்பிக் கொடுத்துள்ளாராம் சிரஞ்சீவி.

சம்பளத்தை திருப்பிக் கொடுத்த சிரஞ்சீவி: தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்த போலா சங்கர் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. ரஜினியின் ஜெயிலருக்குப் போட்டியாக ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீஸாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மெஹர் ரமேஷ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிரஞ்சீவியுடன் தமன்னா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். சிரஞ்சீவியின் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்தன.

தமிழில் அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய வேதாளம் சூப்பர் ஹிட் அடித்தது. அஜித் ஜோடியாக ஸ்ருதி ஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்காக தான் போலா சங்கர் உருவானது. அஜித் கேரக்டரில் சிரஞ்சீவியும், ஸ்ருதி ஹாசனுக்குப் பதிலாக தமன்னா, லட்சுமி மேனன் கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஏற்கனவே ரஜினியின் ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியதால் போலா சங்கர் படத்துக்கு பெரிய வரவேற்பு இல்லை. அதேபோல், வேதாளம் படத்தில் அஜித் கொடுத்த வைப், தெலுங்கில் சிரஞ்சீவியிடம் இல்லையென சொல்லப்படுகிறது. இதனால் இந்தப் படம் இதுவரை 50 முதல் 60 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தெலுங்கில் எப்போதுமே சிரஞ்சீவியின் படங்களுக்கு நல்ல ஓபனிங் இருப்பது வழக்கம்.

ஆனால், போலா சங்கர் படத்துக்கு மினிமம் கியாரண்டி வசூல் கூட கிடைக்கவில்லையாம். இதனால், தனது சம்பளத்தை சிரஞ்சீவி திருப்பிக் கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதுகுறித்து தயாரிப்பாளர் அனில் சுங்கரா விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது போலா சங்கர் படத்துக்காக சிரஞ்சீவிக்கு 60 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டது. படப்பிடிப்பு முடியும் முன்பே 50 கோடி ரூபாய் கொடுத்துவிட்டதாகவும், அதன் பின்னர் தற்போது 10 கோடி கொடுத்திருந்தாராம்.

ஆனால், போலா சங்கர் படத்தின் தோல்விக்கு பொறுப்பேற்று பேலன்ஸ் 10 கோடியை திருப்பிக் கொடுத்துவிட்டதாக தயாரிப்பாளர் அனில் சுங்கரா கூறியுள்ளார். முன்னதாக ஆச்சார்யா படம் தோல்வியடைந்த போதும் தனது சம்பளத்தை திருப்பிக் கொடுத்திருந்தார் சிரஞ்சீவி. கடந்தாண்டு வெளியான ஆச்சார்யா படத்தில் சிரஞ்சீவியுடன் ராம் சரணும் நடித்திருந்தார். இந்தப் படம் தோல்வியடைந்ததால் இருவரும் சேர்ந்து தங்களது சம்பளத்தில் இருந்து 80 கோடி ரூபாயை திருப்பிக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X